நிலநிரைக்கோடு

From Wikipedia, the free encyclopedia

நிலநிரைக்கோடு
Remove ads

நிலநிரைக்கோடு (இலங்கை வழக்கு: நெட்டாங்கு, தீர்க்க ரேகை Longitude) என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக புவி மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடுகளுள் ஒன்றைக் குறிக்கும். இதனை நிலநெடுவரை, நில நீள்கோடு, தீர்க்கரேகை. புவி நெடுங்கோடு என்றும் அழைப்பர்[1][2][3]

விரைவான உண்மைகள் நிலநிரைக்கோடு (λ), நிலநேர்க்கோடு (φ) ...

நுட்ப அடிப்படையில், இக் கோடுகள் கோண அளவீடாகப் பாகைகளில் குறிப்பிடப்படுகின்றன. இந்த அளவீடு பொதுவாக கிரேக்க எழுத்துரு லாம்டா (λ) மூலம் குறிப்பிடப்படுகிறது. ஒரே நிலநிரைக்கோடு அலகுள்ள புள்ளிகள் அனைத்தும் வட முனையத்திலிருந்து தென் முனையம் வரை செல்லும் ஒரே நேர்கோடில் அமைந்துள்ளன. வழமைப்படி, இவற்றில் முதன்மை நிரைக்கோடு எனப்படும் இங்கிலாந்தின் கிரீன்விச்சில் உள்ள அரச வான் ஆய்வகம் வழியே செல்லும் நிரைக்கோடு 0°ஐக் (சுழியப் பாகை) குறிக்கிறது. பிற இடங்களின் நிரைக்கோட்டு அலகு இந்த முதன்மை நிரைக்கோட்டிலிருந்து கிழக்கே அல்லது மேற்கே எத்தனை பாகைகள் தள்ளி உள்ளன என்பதைக் கொண்டு குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக, முதன்மை நிரைக்கோடு அமைந்திருக்கும் தளத்திற்கும் வட,தென் முனையங்களோடு குறிப்பிட்ட இடம் அமைந்துள்ள தளத்திற்கும் இடையேயுள்ள கோணமாகும். கிழக்கு அல்லது மேற்கு என திசைக் குறிப்பிடப்படாத நிலையில் நேர்மறை அலகுகள் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த இடம் முதன்மை நிரைக்கோட்டிற்கு கிழக்கே அமைந்துள்ளதாகவும் எதிர்மறை அலகுகள் மேற்கே அமைந்துள்ளதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இது ஓர் வலது கை குறிகாட்டு அமைப்பாக, முதன்மை நிரைக்கோட்டில் புவியின் மையத்திலிருந்து வலது கை கட்டைவிரல் வட முனையம் (z அச்சு) நோக்கியும் புவியின் மையத்திலிருந்து வலது கை சுட்டுவிரல் (ஆள்காட்டி விரல்) புவிமையக்கோட்டுடன் இணையாகவும் (x அச்சு) உள்ளது.

ஓர் நிரைக்கோட்டில் ஓரிடத்தின் வடக்கு-தெற்கு அமைவிடம் அந்த இடத்தின் நிலநடுக்கோட்டின் மூலம் குறிப்பிடப்படுகிறது. புவியிடங்காட்டி கருவிகள் இவற்றைக் காட்டும்.

Remove ads

வெளியிணைப்புகள்

விரைவான உண்மைகள்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads