நீச்சல் நடனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீச்சல் நடனம் சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. கழார் என்னும் ஊரிலுள்ள காவிரியாற்றுத் நீர்த்துறையில், அரசன் கரிகாலன், அவன் மகள் ஆதிமந்தி முன்னிலையில், ஆட்டனத்தி, காவிரி என்னும் நீச்சல்மகள் இருவரும் சேர்ந்து நீச்சல் நடனம் ஆடிக் காட்டினர். [1]
- மத்தி
- மத்தி என்பவன் கழார் நகரத்தை ஆண்டுவந்தான். [2]
- கூந்தல் அழகி காவிரி
- ஆட்டன் அத்தி கட்டான உடலை உடையவன். அவனோடு சேர்ந்து இணைந்து நீச்சல் நடனம் ஆடியவன் காவிரி. காவிரி நீண்ட கூந்தலை உடையவள். நீச்சல் நடனத்தின்போது காவிரி ஆட்டனத்தியைக் கடத்திச் சென்றுவிட்டாள். [3]


Remove ads
நீச்சல் நடனம்
- கழார்த் துறையில் நடைபெற்ற இந்த நீச்சல் நடனம் அரசன் கரிகாலன் முன்னிலையில் நடைபெற்றது.
- நீச்சல் தெரியாத யானை ஓடும் வெள்ளத்தில் புரள்வது போலப் புரண்டான்.
- இசை முழக்கத்துடன் இது நடைபெற்றது. அது இன்னிசையாக இல்லை. நடனத்தின் தண்பதத்தைக் காட்டும் தாள இசையாக இருந்தது.
- அவன் காலில் புனைந்திருந்த கழல் அணியைப் புரட்டிக் காட்டினான். (நீரில் மூழ்கிக்கொண்டு காலை நீருக்குமேல் தூக்கி ஆட்டிப் புரட்டிக் காட்டினான்). (Upside down feet dance)
- வயிற்றில் கட்டிய ஆடை நழுவாமல் இருக்கக் கச்சம் கட்டியிருந்தான். அத்துடன் பாண்டில் என்னும் அணிகலனும் அணிந்திருந்தான். அந்தப் பாண்டில் அணியில் மணிகள் கோக்கப்பட்டிருந்தன. அந்த மணிகள் ஒலிக்கும்படி வயிறு மட்டும் மேலே தெரியும்படி உருண்டு ஆட்டிக் காட்டினான். (Dolphin role)
- இப்படி ஆடிய அத்தியின் அணியில் இருந்தவள் காவிரி. அவள் அவனை விரும்பி நீரோட்டத்துடன் ஒளித்துக் கொண்டு சென்றாள். [4]
- (மேலும் நிகழ்ந்த்தை ஆதிமந்தி, மருதி, காவிரியாகிய நீச்சல்மகள் ஆகியோர் செய்தி பற்றிய கட்டுரையில் காணலாம்.)
Remove ads
அடிக்குறிப்பு
காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads