நீதித்தலைவர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீதித் தலைவர்கள் (பழய வழக்கு: நியாயாதிபதிகள்) என்பவர்கள் விவிலியத்தின் படி துவக்க காலத்தில் இஸ்ரயேலருக்கு நீதியரசர்களாகவும் வலிமைமிகு வீரர்களாகவும் வாழ்ந்து இஸ்ரயேல் மக்களை எதிரிகளின்கையினின்று காத்தவர்கள் ஆவர்.[1]
யோசுவாவின் தலைமையின் கீழ் இஸ்ரயேலர் கானான் நாட்டைக் கைப்பற்றியதற்கும் அவர்களிடையே முடியாட்சி தொடங்கியதற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர்கள் இஸ்ரயேலருக்கு தலைவராக இருந்தனர். இவ்விடைப்பட்ட காலத்தில் அரசு ஏதும் இருக்கவில்லை. தேவை ஏற்படும்போது இவர்கள் போரிலும், பிற வழக்குகளிலும் தலைமை தாங்கினர்.[2] இவர்களுள் பெரும்பாலோர் வலிமை மிகு வீரர்களாகவும் படைத்தலைவர்களாகவும் ஆளுநர்களாகவும் இருந்தனர்.
Remove ads
விவிலியத்தில் பெயர் குறிக்கப்பட்டுள்ள நீதித்தலைவர்கள்
நீதித் தலைவர்கள் நூலில் குறிக்கப்பட்டுள்ளவர்கள்:
- ஒத்னியேல் 3:7-11
- ஏகூது 3:12-30
- சம்கார் 3:31
- தெபோரா 4:1-5:32
- கிதியோன் 6:1-8:35
- அபிமெலக்கு 9:1-57
- தோலா 10:1-2
- யாயிர் 10:3-16
- இப்தாகு 10:17-12:7
- இப்சான் 12:8-10
- ஏலோன் 12:11-12
- அப்தோன் 12:13-15
- சிம்சோன் 13:1-16:31
1 சாமுவேல் நூலில் குறிக்கப்பட்டுள்ளவர்கள்:
- ஏலி
- சாமுவேல்
- யோவேல் மற்றும் அபியா (சாமுவேலின் புதல்வர்கள்)
சாமுவேலின் புதல்வர்கள் புதல்வர்கள் பொருளாசகைகு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை. இதனால் வெறுப்படைந்த இஸ்ரயேலின் பெரியோர் ஒன்று கூடி சாமுவேலிடம் வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமிக்க வேண்டினர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads