நீரியல்சார் வானிலையியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீரியல்சார் வானிலையியல் (Hydrometeorology ) என்பது நீரியல் மற்றும் வானிலையியல் ஆகிய இரு பிரிவுகளும் சேர்ந்த ஒரு கிளை அறிவியல் துறையாகும். புவியின் மேற்பரப்பு மற்றும் கீழ் வளிமண்டலம் இவற்றுக்கு இடையிலான நீர் மற்றும் ஆற்றல் மாற்றங்களை இத்துறை ஆய்வு செய்கிறது. நீரியல்சார் வானிலையால் தோன்றும் இயற்கை இடையூறுகள் மற்றும் அவற்றின் இடப்பெயர்ச்சி விளைவுகள் முதலியவற்றை ஆய்வு செய்ய, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ)[1] பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை கொண்டுள்ளது. குறிப்பிட்ட இந்த இடையூறுகளுடன் இயற்கைச் செயல்முறைகளின் விளைவுகள் அல்லது வளிமண்டல நீரியல் அல்லது கடலியல் இயல்புகளான வெள்ளம், புயல், வறட்சி மற்றும் பாலைவனமாதல் போன்றனவும் இணைந்துள்ளன. வளர்ந்து வரும் இவ்விடையூறுகளை பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவித்து எச்சரிக்கை செய்யவும் அவற்றின் விளைவுகளை குறைக்கவும் சமாளிக்கவும் பல்வேறு நாடுகள் நீரியல்சார் வானிலையியல் தொலைநோக்குத் திட்டங்களை வகுத்துள்ளன.
Remove ads
நடைமுறையிலுள்ள தொலைநோக்குத் திட்டங்கள்
நீரியல்சார் வானிலையியல் தொலை நோக்குத் திட்டங்களை தற்போது செயல்படுத்திவரும் நாடுகளின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.
1. ஆத்திரேலியா
2. கனடா
3. இங்கிலாந்து மற்றும் வேல்சு.[2]
4. பிரான்சு[3]
5. இந்தியா [4]
6. இசுக்காட்லாந்து[5]
7. செர்பியா[6]
8.உருசியா
9. அமெரிக்க ஐக்கிய நாடு
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads