நீர் மாசுபாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீர் மாசடைதல் அல்லது நீர் மாசுபாடு என்பது, ஏரிகள், ஆறுகள், கடல்கள், நிலத்தடி நீர் என்பன போன்ற நீர் நிலைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும். நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளில் மாறுதல்கள் நிகழ்வதனால் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது. இது அந்த நீர் நிலைகளில் வாழும் விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.


இயற்கை நிகழ்வுகளான எரிமலை வெடிப்பு, அல்காப் பெருக்கம், புயல், நிலநடுக்கம் போன்றவையும் நீரின் தரத்திலும், அதன் சூழலியல் நிலைமையிலும் பெரும் மாற்றங்களை உண்டு பண்ணுகின்றன. எனினும், மனிதச் செயற்பாடுகளினால் அந்நீர் தூய்மை கெட்டு, மனிதப் பயன்பாட்டுக்கு உதவாமலும், உயிரினங்களின் வாழ்வுக்கு உதவாமலும் போகும் நிலையே நீர் மாசடைதல் எனப்படுகிறது. நீர் மாசடைதலுக்குப் பல காரணங்கள் இருப்பதுடன் அது பல இயல்புகளை உடையதாகவும் இருக்கிறது. நீர் மாசடைதலுக்கான முக்கிய காரணங்களை, மாசின் மூலத்தைப் பொறுத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது, ஓரிடமூல மாசடைதல் (Point-source pollution) எனப்படும். மற்றது, பரந்தமூல மாசடைதல்' (Non-point source pollution) எனலாம். முதல்வகை, ஒற்றை இட மூலத்திலிருந்து மாசு நீரில் கலப்பதனால் உருவாகும் மாசடைதல்களை உள்ளடக்குகிறது. இரண்டாவது வகை மாசடைதல் ஒற்றை இடத்திலிருந்து உருவாவதில்லை. இது, ஒரு பரந்த இடப்பரப்பில் இருந்து சிறிது சிறிதாகச் சேகரிக்கப்படும் மாசுகளால் உருவாகின்றது. அதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Remove ads
மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு
தமிழ்நாடு அரசு நீர்வள ஆதார அமைப்பு மாசு கலந்த நீரால் மனித உடலில் ஏற்படும் பாதிப்பினைக் காட்டும் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வரைபடத்தில் மனித உடலில் ஒவ்வொரு பகுதியிலும் என்ன என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தரப்பட்டுள்ளது.இங்கு இந்த வரைபடத்தைப் பார்வையிடலாம்.
நீர் மாசுபடும் விதங்கள்
நுண்ணுயிர் மாசுக்கள்
மனிதனின் இன்றியமையாத கழிவுகள் அதிக அளவில் வெளியேற்றப் படுவதானால் நீர் மாசுபடுத்தப்படுகின்றது.
விளைவு
- மனிதர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.(எ.கா: பாக்டீரியா, வைரஸ் மற்றும் புழுக்களால் வரும் நோய்கள்)
- நீர் வாழ் உயிரினங்கள் இறப்புக்குள்ளாகின்றன.
ஆக்சிசன் அளவு குறை மாசுக்கள்
வெப்ப விளைவின் காரணமாக நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைவதினால் நீர் மாசுபடுகின்றது. பொதுவாக, நீரில் ஆக்சிசனின் அளவு 8 முதல் 15 மில்லி கிராம் /லிட்டர் -ஆக இருக்க வேண்டும்.
விளைவு
- நீரில் உள்ள நுண்ணுயிரிகளான நன்னீர் பாக்டீரியாக்கள் ஆக்சிசன் குறைவால் இறக்க நேரிடும்.
- இதனால் நீர்வாழ் உயிரினங்களான மீன்கள் அழிகின்றன. (எ.கா: சாக்கடைக் கழிவுநீர், விலங்குகளின் எச்சம் & கழிவுநீர், காகிதத் தொழிற்சாலைக் கழிவுநீர் உள்ளிட்டவை நன்னீரில் கலப்பது)
கனிம வேதிய மாசுக்கள்
தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் கலப்பதனால் நீர் மாசடைகிறது.
விளைவு
- குடிநீராகவும் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாது,
- தோல் புற்றுநோய்கள் ஏற்படும், நரம்பு மண்டலம், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படுகின்றன;
- இரும்பு துருப்பிடிக்கிறது.
- விவசாயத்தில் மகசூல் குறைகின்றது.
கரிம வேதிய மாசுக்கள்
தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள், வீட்டுக் கழிவுநீர், சிறுநீர் தேக்கம் போன்றவை கலப்பதனால் நீர் மாசடைகிறது.
விளைவு
- நரம்புமண்டலம் பாதிக்கப்படுகின்றது, புற்றுநோய் உண்டாகின்றது,
- மீன்கள் மற்றும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
எ.கா: எண்ணெய், பெட்ரோல், நெகிழி, சலவைத்தூள், பூச்சிக்கொல்லி மருந்துகள்
உள்ளீட்டால் ஏற்படும் மாசுக்கள்
நிலச்சரிவு மற்றும் மணல் அரிப்பு ஏற்படுவதால் நீரின் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றது.
விளைவு
- உணவுச் சங்கிலியில் மாற்றம் ஏற்படுகிறது
- ஏரி, நீர்த்தேக்கத் தொட்டிகளில் வண்டல்கள் மற்றும் மணல் துகள்கள் படிவதனால் நீரின் கொள்ளளவு குறைகின்றது.
- சமுத்திரம் அமிலமாதல்,
- சமுத்திரம் வெட்ப அளவு மாறுபடுதல்
Remove ads
நீர் மாசடைவதைத் தடுக்கும் முறைகள்
- ஊட்டப் பொருள் & உயிர்கொல்லி குறைத்தல்
- சாக்கடை நீரின் அளவை குறைத்தல்
- காடுகளை அழிப்பதனை முற்றிலும் நிறுத்துதல்
- எண்ணெய் மற்றும் பெட்ரோல் போன்ற திரவங்கள் நீரில் கலப்பதனை தடுக்க வேண்டும்
- பாதரசம் வெளியேற்றப்படுவதை குறைத்தல்
- சுரங்கத் தொழில் ஒத்திகை நிறுத்துதல்
- இரசாயனம் & வேதிப் பொருள் சுற்றுப்புறத் தூய்மைக் கேட்டை சுத்தப் படுத்துதல்
- கோள வெதும்பல்/புவி வெப்பமயமாதலுக்கு எதிராகப் போராடுதல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads