நீலக்கல்

From Wikipedia, the free encyclopedia

நீலக்கல்
Remove ads

நீலம் அல்லது நீலக்கல் (sapphire) நவரத்தினங்களுள் ஒன்று. நீலக்கல் என்பது குருந்ததால் ஆன இரத்தினக் கல்லைக் குறிக்கும். இக்கல்லில் சிறிய அளவில் காணப்படும் இரும்பு, டைட்டேனியம், குரோமியம் போன்ற மூலகங்கள் இக்கல்லிற்கு நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, செம்மஞ்சள், பச்சை நிறங்களைக் கொடுக்கும்.

விரைவான உண்மைகள் நீலக்கல், பொதுவானாவை ...

இக்கல் நகைகளில் இட்டுப் பயன்படுத்தப்படுகிறது. நீலக்கல் இயற்கையாக மண்படிவுகளில் கிடைக்கப்பெறுகின்றது. செயற்கையாகச் செய்யப்பட்ட நீலக்கற்களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. உயர் வண்மையைக் கொண்டுள்ளபபடியால் இலத்திரனியல் கருவிகளில் அகச்சிவப்பு ஒளியில் கூறுகளிலும் நீண்ட நாள் பயன்படும் சாளரங்கள், கடிகாரப் பளிங்குகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

Remove ads

இயற்கை நீலக்கற்கள்

நீலக்கல் பெரும்பாலும் நீல நிறத்தில் இருக்கும். நீலம் இலங்கை, மடகாசுகர், பர்மா, கென்யா, அமெரிக்கா, தாய்லாந்து, சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிசுத்தான் போன்ற பல நாடுகளில் கிடைக்கிறது. 1987 வரை ஆஸ்திரேலியாவிலும் தற்போது மடகாசுகரிலும் அதிக அளவில் நீலம் கிடைக்கிறது.

நீலத்தின் மதிப்பு அதன் நிறம், தூய்மை, அளவு, பட்டை மற்றும் அது தோண்டப்பட்ட இடத்தின் மூலத்தைப் பொறுத்து மாறுபடும்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads