நீலாங்கரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீலாங்கரை (ஆங்கிலம்:Neelankarai), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. நீலாங்கரை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,688 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். நீலாங்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நீலாங்கரை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
நீலாங்கரை பெயர் காரணம்
திருவான்மியூர் மற்றும் கொட்டிவாக்கம் பகுதியை ஒட்டியுள்ள பகுதிதான் இந்த நீலாங்கரை. நீலாங்கரை கிழக்கு கடற்கரை இங்கு தான் அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் இங்கு அதிகமாக அமைந்துள்ளது. மக்கள் அதிகமாகவும், மீன்பிடித் தொழில் அதிகமாக நடைபெறும் பகுதியாக அமைந்துள்ளன. மிகவும் எழில் மிகுந்த கடற்கரையாக சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து வரும் பகுதி இந்த நீலாங்கரை. மிகவும் நீளமான கடற்கரை அமைந்துள்ள காரணத்தினாலேயே இப்பகுதி நீலாங்கரை என அழைக்கப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads