நுவரெலியா தேர்தல் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நுவரெலியா தேர்தல் மாவட்டம் (Nuwara Eliya Electoral District) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் மத்திய மாகாணத்தின் நுவரெலியா நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 2010 ஆண்டு தேர்தலில் 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இம்மாவட்டத்தில் 457,137 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்[1].
Remove ads
தேர்தல் தொகுதிகள்
நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:
- நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதி
- வலப்பனை தேர்தல் தொகுதி
- கொத்மலை தேர்தல் தொகுதி
- அகுரன்கெத்தை தேர்தல் தொகுதி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads