நெடுநல்வாடை (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நெடுநல்வாடை (ஆங்கிலம்: NEDUNALVADAI) என்பது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.அறிமுக இயக்குநர் செல்வகண்ணன் இதை எழுதி இயக்கியுள்ளார். பி-ஸ்டார் புரொடக்சன்ஸ் இதனை தயாரித்துள்ளது. சங்க இலக்கியத்தில் நக்கீரர் எழுதிய கவிதையால் ஈர்க்கப்பட்ட இந்த படம், தலைப்பு குறிப்பிடுவது போல, ஒரு ஆணும் பெண்ணும், ஒரு தாத்தா மற்றும் அவரது பேரனின் பிரிவினையின் வலியைப் பற்றியது.[1][2] இந்த படத்தில் எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர் மற்றும் பிற நடிகர்களுடன் 'பூ' ராம் மற்றும் மைம் கோபி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாடலாசிரியர் வைரமுத்து இப்படத்தின் திரைக்கதையால் ஈர்க்கப்பட்டு அனைத்து பாடல்களையும் எழுதினார். இது இந்த படத்திற்கு ஒரு கூடுதல் பலமாகும்.

Remove ads

கதை

செல்லையா (பூ ராம்) ஒரு எளிய விவசாயி. அவர் குடும்பத்தை மிகவும் நேசிக்கிறார். இவருக்கு கொம்பையா (மைம் கோபி) என்ற மகனும், பேச்சியம்மா (செந்தி குமாரி) என்ற மகளும் உள்ளனர். அவர் காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஆனால் அவரது கணவன் ஒரு குடிகாரன். மேலும் அவனுக்கு குடும்பத்தின் மேல் சிறிதும் அக்கறை இல்லை. துரதிர்ஷ்டவசமாக, பேச்சியம்மா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். மேலும் இளங்கோ (எல்விஸ் அலெக்சாண்டர்) என்ற மகனுடனும், ஒரு மகளுடனும் வாழ்வதற்கான சவால்களை எதிர்கொள்கிறார். எனவே அவர் தனது தந்தையிடம் திரும்புகிறார். செல்லையா, அவளது ஓடிப்போன செயல் குறித்து அதிருப்தி அடைந்தாலும், அவர்களை வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று அவர்களுக்கு ஆதரவளிக்கத் தொடங்குகிறார். இருப்பினும், கொம்பையாவுக்கு இது பிடிக்கவில்லை. செல்லையா தனது மகளின் குடும்பத்தை நேசிக்கிறார். ஆதரிக்கிறார். பேரக்குழந்தைகளின் கல்வியை கவனித்துக்கொள்கிறார். பேரன் இளங்கோ, படிக்கும் போதே கிராமத்தில் உள்ள அமுதா (அஞ்சலி நாயர்) என்ற பெண்ணுடன் காதலில் விழுகிறார். குடும்பத்தை கவனித்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் மற்றும் அவரது பொறுப்புகள் என்ன என்பது பற்றி செல்லாயா இளங்கோவுக்கு அறிவுறுத்துகிறார். இந்த வயதில் காதலில் விழுந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் எச்சரிக்கிறார். அதே நேரத்தில் அவர் குடும்பத்திற்கு பொறுப்பாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார். இளங்கோ குடும்பத்தையும் தனது காதலியின் அன்பையும் எவ்வாறு சமநிலைப்படுத்த முயற்சிக்கிறார் என்பதும் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதமுள்ள கதை சொல்கிறது

Remove ads

நடிகர்கள்

கருவத்தேவர் என்கிற செல்லையாவாக பூ ராம்
கொம்பையாவாக மைம் கோபி
இளங்கோவாக எல்லிஸ் அலெக்சாண்டர்
அமுதாவாக அஞ்சலி நாயர்
மருதுபாண்டியாக அஜய் நடராஜ்
பேச்சியம்மாவாக செந்திகுமாரி
நம்பித்தேவராக ஐந்து கோவிலான்

தயாரிப்பு

இப்படத்தின் இயக்குநர் செல்வ கண்ணன் திருநெல்வேலி சங்கர் நகர், சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவன் ஆவார். இத்திரைப்படம் பொது மக்களிடம் நிதி திரட்டப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும். அவருடைய கல்லூரி நண்பர்கள் 50 பேர் இணைந்து பணம் திரட்டி தயாரித்துள்ளனர். செல்வக்கண்ணனின் நண்பர் ஒருவர் இயக்குனரின் முயற்சியில் ஒரு தயாரிப்பாளரைப் தேடுவதில் சிரமப்படுவதை அறிந்தபோது இது தொடங்கியது. அவர் அனைத்து வகுப்பு தோழர்களையும் வாட்ஸ்அப் குழுமத்தின் மூலம் இணைத்தார். கடைசியில் படப்பிடிப்பு நடந்தது.[3] திரைப்படத் தயாரிப்பாளர்கள் ராஜேஷ் செல்வா, சாமி மற்றும் காந்தி கிருஷ்ணா, ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய செல்வகண்ணன், 2014 ஆம் ஆண்டில் இயக்குநராகும் திசையை நோக்கிச் செல்ல முடிவு செய்தார். இருப்பினும், அவர் சந்தித்த தயாரிப்பாளர்கள் எவரும் இந்த திட்டத்திற்கு நிதியளிக்க தயாராக இல்லை. “இது போன்ற கதைகளுக்கு தயாரிப்பாளர்களை நம்ப வைப்பது கடினம். கார்த்திக் சுப்புராஜ் மட்டும் இல்லாதிருந்தால், தயாரிப்பாளர்கள் குறும்பட இயக்குநர்களை ஊக்குவிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று அவர் கூறுகிறார்.[1]

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads