நெடுநாள் சிறுநீரகக் கோளாறு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நெடுநாள் சிறுநீரகக் கோளாறு (Chronic kidney disease, CKD அல்லது chronic renal disease), பல மாதங்கள் அல்லது ஆண்டுகளாக படிப்படியாக சிறுநீரகம் செயலிழந்து வருவதாகும். சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து வருவதன் அறிகுறிகள் குறிப்பிடும்படி இல்லை எனினும் பொதுவான உடல்நலமின்மை மற்றும் பசியின்மை இதன் அறிகுறிகளில் ஒன்றாகும். பெரும்பாலும் இந்நோய் வரக்கூடிய வாய்ப்புள்ளவர்களுக்கு,( உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்,மற்றும் இந்நோய் உள்ளவர்களின் இரத்த உறவினர்கள்), ஆய்வகச்சோதனை வடிகட்டல் நடத்துவதன் மூலம் கண்டறியப்படுகிறது. இதயக் குழலிய நோய், குருதிச்சோகை அல்லது இதய வெளியுறை அழற்சி போன்ற இந்த நோயால் ஏற்படுத்தபடும் அறியப்பட்ட பிற உடற்கோளாறுகள் மூலமாகவும் கண்டறியப்படுகிறது.[1]

விரைவான உண்மைகள் நெடுநாள் சிறுநீரகக் கோளாறு, வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...

நெடுநாள் சிறுநீரகக் கோளாறு குருதிச் சோதனையில் உயர்ந்த அளவில் கிரியாட்டினைன் இருப்பதைக் கொண்டு அறியப்படுகிறது. கிரியாட்டினைனின் உயர்ந்த அளவு குளோமரூலர் வடிகட்டல் வீதம் குறைந்திருப்பதையும் அதனால் சிறுநீரகத்தினால் கழிவுப்பொருட்களை வெளியேற்றும் திறன் குறைந்திருப்பதையும் அறிவிக்கிறது. ஆரம்பநிலை நோயில் கிரியாட்டினைன் அளவு இயல்பாக இருக்கலாம். இந்த நிலையில் சிறுநீர் சோதனைகளில் புரதம் அல்லது செங்குருதியணு சிறுநீரில் வெளியேறுவதைக் கொண்டு கண்டறியப்படுகிறது.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads