நெட்டாண்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெட்டாண்டு (Leap Year) என்பது பருவ மற்றும் வானவியல் ஆண்டுடன் நாட்காட்டியை ஒருமுகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஒரு நாளையோ கிழமையையோ மாதத்தையோ கொண்டது ஆண்டாகும். எடுத்துக்காட்டாக பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் வரும் ஆண்டை குறிப்பிடலாம். பருவங்களும் வானவியல் நிகழ்வுகளும் சரியாக ஒரே நாள் இடைவெளியில் நடைபெறுவதில்லை. எனவே, ஒரே அளவு நாட்களைக் கொண்ட நாட்காட்டி, காலப்போக்கில் அது நடக்கவேண்டிய பருவத்தில் இருந்து நகரும். இந்த நகர்வை ஓர் ஆண்டின் ஒரு நாளையோ கிழமையையோ மாதத்தையோ கூடுதலாக இணைப்பதன் மூலமாக சரிசெய்யலாம். நெட்டாண்டு அற்ற ஓராண்டு சாதாரண வருடம் என அழைக்கப்படுகிறது.
Remove ads
கிரெகோரியின் நாட்காட்டி
இன்று பரவலாக பயன்பாட்டில் உள்ள கிரெகொரியின் நாட்காட்டியானது பிப்ரவரி மாதத்துக்கு கூடுதலான 29வது நாளை, நான்கால் வகுக்கப்படும் எண்ணிக்கையிலான ஆண்டுகளுக்கு சேர்க்கின்றது. எவ்வாறெனினும் நூற்றாண்டு ஆண்டுகளில் 400 ஆல் வகுக்கப்படும் ஆண்டுகளுக்கு மட்டுமே இது சேர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 1600, 2000 என்பன நெட்டாண்டுகளான அதேசமயம் 1700, 1800, 1900 என்பன நெட்டாண்டுகளில்லை.
இதற்கான காரணம் வருமாறு:
கிரெகோரியின் நாட்காட்டியானது இளவேனிற் சம இராப்பகல் நாள் மார்ச் 21 க்கு அருகாமையில் வருமாறு வடிவமைக்கப்பட்டதாகும். இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு நாளானது (மார்ச் 21 அல்லது அதற்கருகில் வரும் சந்திரனின் 14வது நாளுக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படும்) இளவேனிற் சம இராப்பகல் நாள் சார்பாக்க சரியாக இருக்கும்.
சம இராப்பகல் நாள் ஆண்டானது தற்சமயம் சுமார் 365.242375 நாள் நீளமானது. கிரெகோரியின் நெட்டாண்டு விதியானது சராசரி ஆண்டுக்கு 365.2425 நாட்களை கொடுக்கிறது. 0.0001 சற்று மிகையான கூடுதல் சேர்ப்பு காரணமாக 8000 ஆண்டுகளில் நாட்காட்டியானது ஒரு நாள் பிந்தி காணப்படும். ஆனால் 8000 வருடங்களில் சம இராப்பகல் நாள் வருடமானது முன்மொழியப்படமுடியாத அளவினால் சிறியதாக காணப்படும். எனவே கிரெகோரியின் நாட்காட்டி போதுமான அளவு துல்லியம் கொண்டுள்ளது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads