கிரெகொரியின் நாட்காட்டி

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாட்காட்டி From Wikipedia, the free encyclopedia

கிரெகொரியின் நாட்காட்டி
Remove ads

கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது உலக அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும்.[1][2][3] இந்த நாட்காட்டி மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டி பன்னாட்டுத் அஞ்சல் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது.[4]

Thumb
உரோமையில் புனித பேதுரு பெருங்கோவிலில் உள்ள திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் கல்லறை. நாட்காட்டி சீர்திருத்தம் கொண்டாடப்படும் காட்சி

இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கிமு 45-இல் உரோமைப் பேரரசர் யூலியசு சீசரால் உருவாக்கப்பட்ட யூலியன் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியசு இலிலியசு என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது 1582 பிப்ரவரி 24 இல் அப்போதைய திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று.

இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6-ஆம் நூற்றாண்டில் தயனீசியசு எக்சீகுவசு என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.

கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த உரோமானிய நாட்காட்டியில் சனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, சூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே சூலை மற்றும் ஆகத்து மாதங்கள் சேர்க்கப்பட்டன.

கிரகோரியின் நாட்காட்டியானது 'சூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.

எசுப்பானியா, போர்ச்சுக்கல், போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம், இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752-ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரேக்கம் ஆகும். 1923 பிப்ரவரி 15 இல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.

Remove ads

விளக்கம்

சூரிய நாட்காட்டி வகையைச் சார்ந்தது கிரிகோரியன் நாட்காட்டியாகும். ஒரு வழக்கமான கிரிகோரியன் ஆண்டு என்பது முன்நூற்று அறுபத்து ஐந்து (365) நாட்களையும், ஒரு லீப்(நெட்டாண்டு) ஆண்டினையும் உடையதாகும். லீப் ஆண்டு என்பது வழக்கமான கிரிகோரியன் ஆண்டு நாட்களுடன், பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்து முன்நூற்று அறுபத்து ஆறு (366) உடையதாகும். பொதுவாக லீப் ஆண்டு நான்கு கிரிகோரியன் ஆண்டுக்கொருமுறை ஏற்படுகிறது. சூலியன் நாட்காட்டி படி இல்லாமல் நானூறு (400) ஆண்டுகளுக்கு மூன்று (3) லீப் வருடங்களைக் கிரிகோரியன் நாட்காட்டி தவிர்த்துவிடுகிறது.

ஒரு கிரிகோரியன் ஆண்டானது பின்வரும் பன்னிரண்டு மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

மேலதிகத் தகவல்கள் வரிசை எண்., மாதத்தின் பெயர் ...

ஒவ்வொரு மாதமும் சீரற்ற முறையில் வருகின்ற நாட்களைக் கணக்கிட கீழ்கண்ட ஈடுகோள் உதவுகிறது.

L = 30 + { [ M + floor(M/8) ] MOD 2 }

இதில் L என்பது மாதங்களின் நாட்கள் எண்ணிக்கையைக் குறிக்கும், M என்பது 1 முதல் 12 வரையான மாதத்தின் வரிசை எண்ணைக் குறிக்கும்.

பொதுவாகப் பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடி காலத்தினை எடுத்துக் கொள்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் காலத்தினை ஒருநாள் என்று வைத்துக் கணக்கிட இருக்கும் சிரமத்தினை எண்ணி, ஒரு ஆண்டினை 365 நாட்கள் என்ற முழு எண்ணாகக் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மீதமிருக்கும் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகளைத் தவர்க்க இயலாது என்பதால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நாளாகப் பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்துக் கிரிகோரியன் நாட்காட்டில் கணக்கிடப்படுகிறது.

இவ்வாறு ஆண்டிற்கொருமுறை ஒரு நாளை (பிப்ரவரி 29) நாளை இணைக்கையில் 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடி காலம் அதிகமாக இணைக்கப்படுகிறது. எனவேதான் நூறு வருடங்களுக்கு ஒரு முறை லீப் வருடம் (நெட்டாண்டு) கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான பல சீர்த்திருத்தங்களை கொண்ட கிரிகோரியன் நாட்காட்டினாது, மேலும் தீர்வில்லாத சிக்கல்களை கொண்டிருப்பதால் இந்த நாட்காட்டியானது சரியானது இல்லை என்ற கருத்தும் அறிஞர்களிடையே உள்ளது.

சந்திர நாட்காட்டி

கிறிசுதுவர்கள் பொதுவாக இயேசுவின் பிறந்தநாளென்று டிசம்பர் 25 ஆம் நாளைக் குறித்துக் கொண்டாலும், இயேசு உயிர்த்தெழுந்த நாளைக் கணக்கிட கிரிகோரியன் நாட்காட்டியை அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஆண்டுதோறும் வேறுவேறு நாட்களில் வருகிறது. இதற்குச் சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தினையும் கணக்கில்கொள்வதே காரணமாகிறது.

Remove ads

சூலியன் நாட்காட்டி

சூலியசு சீசரினால் அறிமுகம் செய்யப்பட்ட நாட்காட்டியானது அவருடையப் பெயரிலேயே சூலியன் நாட்காட்டி என்று அறியப்பெறுகிறது. இது கிமு 46ல் அறிமுகம் செய்யப்பெற்றது. இது உரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. ஆகவே சூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும்.

Remove ads

ஏற்றுக்கொண்ட நாடுகள்

கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக்கொண்ட நாடுகள் வருட வாரியாக
1500 1600 1700 1800 1900
1582: எசுப்பானியா, போர்ச்சுகல், பிரான்சு, போலந்து, இத்தாலி,

கத்தோலிக்க லோ நாடுகள், லக்சம்பர்க்,மற்றும் காலனி நாடுகள்

1610: புருசியா 1700: செருமனி, சுவிச்சர்ராந்தின் கன்டோசு, நார்வே, டென்மார்க 1873: சப்பான் 1912: சீனா, அல்பேனியா
1584: பொகிமீய அரசாங்கம் 1648: எல்சசு 1752: பிரித்தானியப் பேரரசு மற்றும் அதன் காலனி நாடுகள் 1875: எகிப்து 1915: லதுவியா, லிதுவேனியா
1682: இசுட்ராசுபர்கு 1753: சுவீடன் மற்றும் பின்லாந்து 1896: கொரியா 1916: பல்கேரியா
1918: சோவியத் ஒன்றியம், எசுதோனியா
1919: உரோமானியா, யூகோசுலோவியா
1923: கிரீசு
1926: துருக்கி

கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் சூலியன் நாட்காட்டி இடையே உள்ள வேறுபாடுகள்

கிரிகொரியின் நாட்காட்டி அறிமுகம் செய்ததிலிருந்து, இதற்கும் ஜூலியன் நாட்காட்டிக்குமிடையேயான நாட்களின் வித்தியாசங்கள் ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் மூன்று நாட்கள் என்ற வீதத்தில் அதிகத்தவண்ணம் இருந்துள்ளது. அதனைக் கீழ்கண்ட அட்டவணையில் காணலாம்.

மேலதிகத் தகவல்கள் கிரிகோரியன் அளவீடு, சூலியன் அளவீடு ...
Remove ads

கிமு மற்றும் கிபி

கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் சூலியன் நாட்காட்டிகளில் எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு முறைக்கு அனொ டாமினி என்று பெயர். இதற்குக் கடவுளின் ஆண்டு என்ற இலத்தீன் மொழியில் பொருளாகும். கிறித்துவின் பிறப்பினை அடிப்படையாகக் கொண்ட இந்த முறை, கிறிதுவிற்கு முன் (கி.மு) என்றும் கிறிதுவிற்கு பின் (கி.பி) என்றும் காலத்தினை பகுக்கிறது.

ஆண்டின் துவக்கம்

மேலதிகத் தகவல்கள் நாடு, சனவரி 1-இல் எண் வருடத்தின் துவக்கம் ...
Remove ads

மாதங்கள்

கிரெகொரியன் நாட்காட்டியானது சூலியன் நாட்காட்டியின் மாதங்களின் தொடர்ச்சியாதலால் மாதங்கள் பெயர்கள் இலத்தின் மொழியிலிருந்து எடுக்கபட்டதாகவும் மாறுபட்ட நாட்களைக் கொண்டதாகவும் இருக்கின்றன.

  • சனவரி (31 நாட்கள்), mēnsis Iānuārius என்ற இலத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். " தொடக்கத்திற்குரிய யனுஸ் என்ற ரோமானியக் கடவுளின் மாதம்",[14]
  • பிப்ரவரி (பொதுவாக 28 நாட்கள் நெட்டாண்டில் (leap year) 29 நாட்கள்), mēnsis Februāriusஎன்ற இலத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "பெப்ருவா மாதம்]", உரோமானியத் தூய்மைத் திருவிழா,[15][16]
  • மார்ச் (31 நாட்கள்), mēnsis Mārtiusஎன்ற இலத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "செவ்வாய் கோள் மாதம் (month of Mars),[17] உரோமானிய போர்க்கடவுளைக் குறிக்கும் மாதம்
  • ஏப்ரல் (30 நாட்கள்),mēnsis Aprīlisஎன்ற இலத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். உறுதியில்லா பொருள் , ஏப்ரோடைட் என்ற ரோமானியக் கடவுள் பெயரை குறிக்கும் மாதம் [16][21]
  • மே (31 நாட்கள்), mēnsis Māius என்ற இலத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "விவசாயத்துக்குரிய பெண் கடவுளான மயாவின் மாதம்",[22]
  • சூன் (30 நாட்கள்), mēnsis Iūnius என்ற இலத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "ஜூனோ மாதம்",[23] திருமணம், குழந்தை பிறத்தல், மற்றும் ஆட்சி செய்தலுக்கான ரோமானிய பெண் கடவுள்
  • சூலை (31 நாட்கள்), mēnsis Iūlius என்ற இலத்தீன் மொழியிலிருந்து, "சூலியஸ் சீசரின் மாதம்", சூலியஸ் சீசர் பிறந்த மாதம்  BC[24]
  • ஆகத்து (31 நாட்கள்), mēnsis Augustus என்ற இலத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "அகசுதஸ் மாதம்",[25]
  • செப்டம்பர் (30 நாட்கள்), mēnsis september என்ற இலத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் உரோமானிய நாட்காட்டியில் "ஏழாவது மாதம்",[26]
  • அக்டோபர் (31 நாட்கள்), mēnsis octōber என்ற இலத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் "எட்டாவது மாதம்",[27]
  • நவம்பர் (30 நாட்கள்), mēnsis november என்ற இலத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் "ஒன்பதாவது மாதம்",[28]
  • திசம்பர் (31 நாட்கள்), mēnsis december என்ற இலத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் உரோமானிய நாட்காட்டியில் "பத்தாவது மாதம்",[29]
Remove ads

மேலும் காண்க

குறிப்புகள்

  1. In 1793 France abandoned the Gregorian calendar in favour of the French Republican Calendar. This change was reverted in 1805.
  1. Protestant states in Germany used an astronomical Easter from 1700 to 1774, based on யோகான்னசு கெப்லர்'s Rudolphine Tables, differing from the Gregorian Easter twice, one week early in 1724 and 1744.[6]
  2. Lorraine reverted to Julian in 1735 and adopted Gregorian again in 1760

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads