நெதர்லாந்து தேசிய காற்பந்து அணி

From Wikipedia, the free encyclopedia

நெதர்லாந்து தேசிய காற்பந்து அணி
Remove ads

நெதர்லாந்து தேசிய கால்பந்து அணி (Netherlands national football team, டச்சு: Nederlands nationaal voetbalelftal) பன்னாட்டு காற்பந்தாட்டத்தில் நெதர்லாந்து சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை நெதர்லாந்தில் காற்பந்தாட்டத்தை ஒழுங்குபடுத்தும் டச்சு அரச கால்பந்துச் சங்கம் (KNVB) நிர்வகித்து வருகின்றது.

விரைவான உண்மைகள் அடைபெயர், கூட்டமைப்பு ...

இந்த அணியை ஆரஞ்சு என்றும் டச்சு பதினொருவர் (Het Nederlands Elftal) என்றும் கால்பந்து இரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். மிகுதியான உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் பங்கேற்று ஒருமுறையும் இறுதியாட்டத்தில் வெல்லாத பெருமை டச்சு அணிக்கு உள்ளது. இவர்கள் இரண்டாமவர்களாக 1974, 1978 மற்றும் 2010 உலகக்கோப்பைகளில் வந்துள்ளனர்; இந்த இறுதியாட்டங்களில் முறையே, மேற்கு செருமனி, அர்கெந்தீனா மற்றும் எசுப்பானியா வென்றனர். ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் 1988இல் வெற்றி கண்டுள்ளனர். 1970களில் இவர்களது அணி தனது உச்சத்தை எட்டியிருந்தது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads