நெய்யரியெலும்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெய்யரியெலும்பு (Ethmoid bone)[1][2] என்பது மண்டையோட்டின் தரைத்தளத்தில் முன்புறம் அமைந்துள்ள எலும்பாகும்.[3]
Remove ads
அமைப்பு
நெய்யரியெலும்பு மூளையையும் நாசிப்பள்ளத்தையும் பிரிக்கும் ஒரு இளகிய எலும்பாகும். மேலும் நாசிப்பள்ளத்தின் கூரையாகவும் கண்குழியை உருவாக்கும் 7 எலும்புகளில் ஒன்றாகவும் உள்ளது. நெய்யரியெலும்பு 13 எலும்புகளுடன் இணைந்துள்ளது. இரு மண்டையோடு எலும்புகளான ஆப்புரு எலும்பு மற்றும் நுதலெலும்புடன் இணைந்துள்ளது. 11 முகவெலும்புகள் நெய்யரியெலும்பு இணைந்துள்ளது. அவைகள் முறையே இரு மூக்கெலும்புகள், இரு மேல்தாடை எலும்புகள், இரு கண்ணீர்க் குழாய் எலும்புகள், இரு அண்ணவெலும்புகள், இரு கீழ்மூக்கு சங்கெலும்புகள் மற்றும் மூக்குச்சுவர் எலும்புடன் இணைந்துள்ளது.[4][5] பறவை இனங்களில் திசை அறியும் நுண்கதுப்புகள் இதில் இருப்பதாக நம்பப்படுகிறது.[6]
Remove ads
தோற்றங்கள்
- நெய்யரியெலும்பு மேலிருந்து.
- நெய்யரியெலும்பின் செங்குத்துத் தளம்.
- நெய்யரியெலும்பு பின்புறத்திலிருந்து.
- நெய்யரியெலும்பு வலது புறத்திலிருந்து.
- மண்டையோட்டின் பக்கவாட்டுத்தோற்றம்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads