நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்

From Wikipedia, the free encyclopedia

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்
Remove ads

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் (Nelapattu Bird Sanctuary) என்பது ஆந்திரப் பிரதேசத்திலுள்ள பறவை சரணாலயம் ஆகும். இது ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது.

Thumb
நெலபட்டு பறவைகள் சரணாலயத்தில் புள்ளி அலகு கூழைக்கிடா (பெலேகனசு பிலிப்பென்சிசு)

அமைவிடம்

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது நெலப்பட்டு என்ற கிராமத்தில் 458.92 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. புள்ளி அலகு கூழைக்கிடா (பெலேகனசு பிலிப்பென்சிசு) இனப்பெருக்கம் செய்யும் முக்கிய இடமாக இது உள்ளது.[1]

தாவரங்கள்

நெலபட்டுசரணாலயத்தில் இரண்டு பெரிய தாவர சமூகங்கள் காணப்படுகின்றன. அவை பாரிங்டோனியா சதுப்புநில காடுகள் மற்றும் தெற்கு உலர் பசுமைமாறா புதர் காடுகள். கொல்லேறு பாதுகாப்பு வனத்தில் 288 ஹெக்டேர் தென் உலர் பசுமைமாற புதர் காடும், 88 ஹெக்டேர் பதிவு செய்யப்படாத காடுகளும் உள்ளடங்கியது . அதிகமாக இக்காடுகளில் காணப்படும் தாவர வகையாகப் பாலை (மரம்), மாபுக்சிபோலியா, பூவை, புச்சன்னானியா ஆன்குசுடிபோலியா, சிசிபசு சைலப்பிரசு மற்றும் பல காணப்படுகின்றன.[2] பாரிங்டோனியா சதுப்புநில காடுகள் 83 ஹெக்டேர் நெலபட்டு குளத்தில் காணப்படுகின்றன. இங்குக் காணப்படும் முக்கிய மரம் செங்கடம்பமரம்.[3] இந்த மரம் மலையகங்களிலும் வளர்கிறது. ஆனால் நெலபட்டுவில் காணப்படும் மர இனங்கள் 5 முதல் 7 மாதங்கள் வெள்ளத்திலும் வளரக்கூடும். நீண்ட கால வெள்ளத்தில் மரக்கன்றுகள் நீரில் மூழ்கியிருந்தாலும் வாழும் திறனுடையன.[4]

Remove ads

விலங்குகள்

சுமார் 189 பறவை இனங்கள் நெலபட்டு பறவைகள் சரணாலயத்தில் காணப்படுகின்றன. இவற்றில் 50 பறவைகள் குடியேறியவை. புள்ளி அலகு கூழைக்கிடாவுடன் வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை குத்தி நாரை, இராக்கொக்கு, மற்றும் சின்ன நீர்க்காகம் ஆகியவற்றிற்கான முக்கியமான இனப்பெருக்கம் இடமாக இது உள்ளது. சரணாலயத்திற்கு வருகை தரும் பிற வலசைப் பறவைகள், ஊசிவால் வாத்து, கிளுவை, சிறு முக்குளிப்பான், ஆண்டி வாத்து, நாமக்கோழி, புள்ளி மூக்கு வாத்து, சாம்பல் நாரை, ஓரியண்டல் டார்டர், நெடுங்கால் உள்ளான், நீலச்சிறகி மற்றும் கருவால் வாத்து ஆகியவை அடங்கும்.[5]

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads