இராக்கொக்கு
ஒரு வகை பறவை From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராக்கொக்கு அல்லது வக்கா[2] என்பது (Black-crowned Night Heron)(நைக்டிகோரக்சு நைக்டிகோரக்சு) நீர்நிலைகளை சார்ந்திருக்கும் வாத்தினை ஒத்த உடலளவுடைய பறவையினம்.
Remove ads
உருவமைப்பு
இவற்றின் உடல் நீளம் சுமார் 64 செ. மீட்டர் வரையும் எடை 800 கிராம் வரையும் இருக்கும்.
வளர்ந்த பறவைகள்

இவைகட்கு கருப்பு நிறத்தில் தொப்பியினைப்போன்ற அமைப்பு தலையின்மீது இருப்பது போக வெள்ளையாகவோ, பழுப்பாகவோ உடல் உள்ளது. சிவந்த கண்களும், குட்டையான மஞ்சள் நிறக்கால்களும் இருக்கும். கருத்த நிறத்திலும் மஞ்சள் கலந்த நிறத்திலும் அலகு உண்டு. இளம்பழுப்பு நிறத்தில் சிறகுகளும், கழுத்தும் உடலின் அடிப்பகுதியும் வெளிரிப்போனது போல் இருக்கும். இரண்டு அல்லது மூன்று இறகுகள் மட்டும் தலையின் பின்புறம் இனவிருத்திக்காலங்களில் நீண்டிருப்பதுண்டு. இரு பாலினமும் ஒன்றாயிருப்பினும் ஆண்கள் பெரியதாக இருப்பதைக்காணலாம். இவை மற்ற நாரைகள் அல்லது கொக்குகள் போன்றில்லாமல் சற்றே தடித்த உடல் வாகுடனும் நீளம் குறைந்த அலகினையும் கால்களும், கழுத்தும் கொண்டுள்ளன. கூனல் பொட்டது போன்று அமர்ந்திருப்பது இதன் சிறப்பம்சம். இவை வேட்டையின் போது மட்டும் கழுத்தை நீட்டுவதால், இராக்கொக்கை நீரில் மேய்ந்துண்ணும் பறவைகளோடு (wading birds) ஒப்பிட இயலும். மற்ற மீனுண்ணும் பறவைகள் பகலில் வேட்டையாட, இவை மட்டும் இரவுப்பறவையாயின.
இளம் பறவைகள்

இளம் பறவைகள் பழுப்பும்-இளஞ்சிவப்பும் கலந்த உருவையும், பல இடங்களில் வெளிரிப்போன புள்ளிகளையும் கொண்டுள்ளன. அடிப்பகுதிகள் வெளுத்துப்போயிருக்கும். கண்கள் இளஞ்சிவப்பு கண்களும் பச்சை-மஞ்சள் கால்களும் கொண்டுள்ளன. இவைகள் மிகவும் அதிகமாக ஒலியெழுப்பும் தன்மையோடு குவாக், குவாக், அல்லது வாக், வாக் என்று கூக்குரலிடுகின்றன.
Remove ads
பரம்பல்
உலகம் முழுதும் பரவி இருக்கின்றன என்றாலும் ஆஸ்திரலேசியா போன்ற மிகுந்த குளிருள்ள பிரதேசங்களை தவிர்க்கின்றன. இப்பகுதிகளில் இளஞ்சிவப்பு இராக்கொக்குகள் ஆட்சி செய்தாலும், இவை இரு இனங்களும் தம்முள்ளே இனவிருத்தியும் செய்தல் கூடும்.
இவை அதிகபட்ச வாழ்விடங்களில் வலசை வரக்கூடிய தன்மை கொண்டுள்ளன, எனினும் பல இடங்களில் தங்கும் உள்ளூர்ப்பறவைகளாகவே காணப்படுகின்றன (குளிர்மிகுந்த பேடகோனியா உட்பட). வட அமேரிக்காவிலுள்ள பறவைகள் மெக்சிகோ மற்றும் தென் அமேரிக்காவிலும் மத்திய அமேரிக்காவிலும் மேற்கிந்திய தீவுகளுக்கும் வலசை வருகின்றன. பழைய உலக பறவைகள் ஆப்பிரிக்காவிற்கும், தெற்கு ஆசியாவிற்கும் வலசை வருகின்றன.
Remove ads
துணையினங்கள்
இவ்வினத்திற்கு நான்கு துணையினங்கள் உள்ளன:
- நை. கோக்டிலி - வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் கனடா முதல் வட அர்ஜென்டினா, சிலி வரை பரவியுள்ளது.
- நை. அபசுகர்சு- தென் அமெரிக்காவின் தெற்குப்பகுதிக.ளில்.
- நை. பல்க்லேன்டிகசு - ஃபாக்லாந்து தீவுகளில்.
- நை. நைடிகோரக்கு - பொதுவாக ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா வரை பரவியுள்ள இனம்.
குணாதிசயங்கள்
இவை பகல் முழுதும் ஏதாவதொரு மரக்கிளையிலோ புதர்களிலோ ஓய்வெடுத்துவிட்டு, மாலைப்பொழுதுகளிலும் இரவிலும் கூட்டங்களாக வேட்டையாட கிளம்புகின்றன.
உணவு
இராக்கொக்குகள் நீரின் கரையருகே இரவிலும் அதிகாலையிலும் அசையாது தன் இரையின் அசைவுகளை பார்த்திருக்கும். தருணம் சரியாய் அமையும் வேளையில் இவை கொத்திப்பிடித்துண்ணுகின்றன. இவற்றின் முக்கிய உணவு சிறிய மீன்கள், தவளைகள், தேரைகள், பூச்சிகள், ஓடுடைய நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் சிறிய பாலூட்டிகளுமாகும்.
இனவிருத்தி
இவை 3 முதல் எட்டு முட்டைகள் வரை இடுகின்றன.
பெயரின் வரலாறு
இவற்றின் பேரினப்பெயரான Nycticorax என்பதற்கு "இரவின் காகம்" என பொருள். இவை இரவில் பெரும்பாலும் வேட்டையாடுதலாலும், இவற்றின் ஒலி காகம் கரைவதைப்போலிருப்பதாலும் இவ்வாறாகப்பெயரிட்டனர்.
ஃபாலக்லாந்து தீவுகளில் இவற்றின் பெயர் ஒலிவடிவை முன்னிட்டு "குவார்க்" ("quark") என்றும், பல்வேறு மொழிகளில் இதுபோன்றொலிக்கும் பெயர்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக டச்சு மற்றும் பிரிசியன் (Frisian) மொழியில் "kwak", செக் மொழியில் "kvakoš noční", உக்ரேன் மொழியில் "квак", ருசியா மொழியில் "кваква", வியட்நாம் மொழியில் "Vạc", இந்தோனிசியா மொழியில் "Kowak-malam", மற்றும் குவெசுவா (Quechua) மொழியில் "Waqwa" எனவும் பெயரிட்டுள்ளன.
Remove ads
உசாத்துணை
மேற்கொண்டு படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads