நேபாளதேசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேபாளதேசம் பாஞ்சாலதேசத்திற்கு வடமேற்கிலும், கோசலதேசத்திற்கு வடக்கிலும், ஆரட்டதேசத்திற்கு மேற்கிலும் இமயமலையின் தெற்கிலும், அகன்று விசாலமாக பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்
இந்த தேசத்தில் பூமி முழுவதும் எப்பொழுதும் இடைவிடாத பனி, மழை, குளிர் இவைகள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்திற்கு கிழக்கு பாகத்திலே ஆயவர்கம் என்ற ஓர் உபதேசமுண்டு.[2]
மலை, காடு, விலங்குகள்
இந்த தேசத்திற்கு நடுவில் தவளகிரி என்ற பெரிய மலையும், குன்றுகளும், அடர்ந்த காடுகளாலும், பெரியமலைகளினாலும், சூழப்பட்டுள்ளதால், இதை மலை நாடு என்றே அழைப்பதுண்டு. இத்தேசத்தின் காடுகளில் வெள்ளைக் குதிரைகளும், வெண்மை ஆடுகளும் கொடிய காட்டு விலங்குகளும் அதிகம் உண்டு.
நதிகள்
இந்த நேபாளதேசத்தின் கிழக்கிலும், ஆரட்டதேசத்திற்கு மேற்கிலும், இமயமலையிலிருந்து உருவாகி தெற்கு நோக்கி ஓடுகிற நதி கௌசிகீ இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது.
கருவி நூல்
- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
சான்றடைவு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads