நேரு-காந்தி குடும்பம்

From Wikipedia, the free encyclopedia

நேரு-காந்தி குடும்பம்
Remove ads

நேரு-காந்தி குடும்பம் (Nehru–Gandhi family) என்பது இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றிய குடும்ப உறுப்பினர்களைக் கொண்டது ஆகும். இக்குடும்ப உறுப்பினர்களில் பலர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை வழிநடத்தியுள்ளனர். மேலும் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமர்களாக பணியாற்றினர். மற்ற குடும்ப உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றினர்.

விரைவான உண்மைகள் நேரு-காந்தி குடும்பம், தற்போதைய பகுதி ...
Thumb
நேரு குடும்பத்தின் பரம்பரைவீடு "ஆனந்தபவன்" (அலகாபாத்). தற்போது இவ்வீடு அருங்காட்சியமாக உள்ளது .
Thumb
நேரு குடும்பம்: நிற்பவர் (இடமிருந்து வலமாக) ஜவகர்லால் நேரு, விஜயலட்சுமி பண்டித், கிருஷ்ணா அதீசிங், இந்திரா காந்தி, இரஞ்சித் பண்டித். அமர்ந்திருப்பவர்: மோதிலால் நேரு, கமலா நேரு (வருடம் 1927)

பெரோஸ் காந்தி இந்திய விடுதலை இயக்கத்தில் கலந்து கொண்டமையால் தனது பெயருடன் காந்தி எனும் பெயரை சேர்த்துக் கொண்டார்.[3][4][5] இந்திரா காந்தி இவரைத் திருமணம் செய்ததால் இவரது பெயருக்குப் பின்னும் காந்தி என்பது சேர்ந்தது.

இந்திய சுதந்திர போராட்டம் முதலே நாட்டில் அரசியல் செல்வாக்கு அதிகம் உள்ள குடும்பம் நேருவின் குடும்பம். மோதிலால் நேரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். மோதிலால் நேருவின் மகனான ஜவகலால் நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர். ஜவகர்லால் நேரு மற்றும் அவரது மனைவி கமலா நேரு ஆகியோர் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள். ஜவகர்லால் நேரு – கமலா நேரு தம்பதிகளின் மகளான இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமரானார். அதன்பின், தன் பாதுகாவலர்களால் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு அவருடைய மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார். ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் அவரது மனைவி சோனியா காந்தி தீவிர அரசியலில் இறங்கினார். இவர்களது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் காங்கிரசு கட்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

Remove ads

குடும்பக் கிளைப்படம்

முந்தைய வரலாறு

  • ராஜ் கௌல் என்பவர் காஷ்மீரில் பண்டித குடும்பத்தை சார்ந்தவர். இவர்தான் நேரு-காந்தி குடும்பத்திற்கு முன்னோடி ஆவார். இவர் கி.பி 1716 ஆம் ஆண்டில் காஷ்மீரிலிருந்து தில்லிக்கு குடிபெயர்ந்ததாக கருதப்படுகின்றது. ஒரு கால்வாய் கரையின் அருகே சாகிர் ராஜ் கவுலுக்கு வழங்கப்பட்டது. இந்த இருப்பிடத்தின் காரணமாக நேரு(நகர் நேருவாக தழுவியது, வாய்க்கால் என்பது பொருள்) இவருக்கு நேரு எனும் புனைபெயர் வந்தது. பின்னர் கவுல் எனும் பெயர் மறைந்து நேரு எனும் புனைபெயர் பயன்படுத்தப்பட்டது.[6]
  • முந்தைய 19 ஆம் நூற்றாண்டில் கங்காதரரின் தந்தையார் லட்சுமி நாராயண நேரு தில்லியில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றியவர்.

முதல் தலைமுறை

  • கங்காதர் நேரு(1827-1861), ராஜ் கௌலின் வம்சாவளியாவார். இவர் சுதந்திர போராட்ட வீரர் மோதிலால் நேருவின் தந்தையாவார். இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவகர்லால் நேருவின் பாட்டனாவார்.

இரண்டாம் தலைமுறை

  • பன்சிதார் நேரு, கங்காதர் நேருவின் மூத்த மகனாவார். பிரிட்டிசு அரசாங்கத்தில் நீதித்துறையில் பணியாற்றியவர்.
  • நந்த்லால் நேரு, கங்காதர் நேருவின் இரண்டாவது மகனாவார். இராஜபுதனத்திலுள்ள கேத்திரி மாகாணத்தில் பிரதம மந்திரியாக பணியாற்றியவர்.
  • மோதிலால் நேரு (1861-1931), கங்காதர் நேருவின் மூன்றாவது மகனாவார். வழக்கறிஞரான இவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைசிறந்த தலைவராவார். இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் தலைவராக (1919–1920 மற்றும் 1928–1929 ஆம் ஆண்டுகளில்) இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.
  • சொரூப ராணி மோதிலால் நேருவின் மனைவியாவார். இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவகர்லால் நேருவின் தாயாராவார்.

மூன்றாம் தலைமுறை

Thumb
இந்திரா காந்தி, ஜவகர்லால் நேரு, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி (வருடம் 1949).
  • ஜவகர்லால் நேரு (1889-1964), மோதிலால் நேருவின் மகனாவார். இவர்தான் இந்தியாவின் முதல் பிரதமர். இவரும் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஒரு தலைசிறந்த தலைவராவார். இந்திய தேசிய காங்கிரஸில் 1929ஆம் ஆண்டில் பணியாற்றியவர்.
  • விஜயலட்சுமி பண்டித் (1900-1990), மோதிலால் நேருவின் மூத்த மகளாவார். இந்திய தூதராகவும் ஐக்கிய தேசிய பொது சட்டசபையில் தலைவராக பணியாற்றியவர்.
  • கிருட்டிணா அதீசிங் (1907-1967), மோதிலால் நேருவின் இளைய மகளாவார். இவர் ஒரு எழுத்தாளர்.
  • கமலா நேரு (1899-1936), ஜவகர்லால் நேருவின் மனைவியாவார். சமுக சீர்த்திருத்தவாதியாகவும் அனைத்திந்திய காங்கிரசு குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
  • பிரிஜலால் நேரு (1884-1964), நந்த்லால் நேருவின் மகனாவார். பேரரசர் ஹரி சிங் ஆட்சியில் ஜம்மு-காஷ்மீரில் நிதியமைச்சராக பணியாற்றியவர்.
  • இராமேசுவரி நேரு (1886-1966), பிரிஜ்லால் நேருவின் மனைவியாவார். சமுக ஆர்வலராகவும் அனைத்திந்திய மகளிர் மாநாடின் இணை நிறுவனராவார்.
  • ரத்தன் குமார் நேரு (1902-1981), நந்த்லால் நேருவின் பேரனாவார். இந்திய தூதராகவும் சமூக பணியாளராகவும் பணியாற்றியவர்.

நான்காம் தலைமுறை

  • இந்திரா பிரியதர்சினி நேரு (பின்பு இந்திரா காந்தி) (1917-1984), ஜவகர்லால் நேருவின் ஒரே மகளாவார். இவர் இந்தியாவின் முதல் பெண் பிரதமர்.
  • பெரோஸ் காந்தி (1912-1960), இந்திரா காந்தி|யின் கணவராவார். அரசியல்வாதியாகவும் மற்றும் பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர்.
  • பிரஜ் குமார் நேரு (1909-2001), பிரிஜ்லால் நேருவின் மூத்த மகனாவார். அமெரிக்க அரசு தூதராகவும் ஐக்கிய நாட்டின் உயர் ஆணையாளராக பணியாற்றியவர்.
  • மக்டோல்னா நேரு (1908-2017), பிரஜ் குமார் நேருவின் மனைவியாவார்.
  • பல்வந்த் குமார் நேரு (1916-1996), பிரிஜலால் நேருவின் இளைய மகனாவார். பொறியாளராகவும் பெருநிறுவன மேலாளராகவும் பணியாற்றிய இவர் ஐடிசியின் துணைத்தலைவரகவும் அனைத்திந்திய மேலாண்மை கழகத்தின் தலைவரகவும் பணியாற்றியவர்.
  • சொரூப் நேரு என்பவர் பல்வந்த் குமார் நேருவின் மனைவியாவார்.
  • சந்திரலேகா மெக்தா, நயந்தரா சாகல் மற்றும் ரீதா தார் ஆகிய மூவரும் விஜயலட்சுமி பண்டிட்டின் மகள்களாவர்.
  • ஹர்ஷா அதீசிங் (1935-1991), மற்றும் அஜீத் அதீசிங் (1936-2017) என்கிற இருவரும் கிருட்டிணா அதீசிங்கின் மகன்களாவர்.

ஐந்தாம் தலைமுறை

  • அருண் நேரு (1944-2013), நந்த்லால் நேருவின் கொள்ளுப்பேரனாவார். 1980களில் அரசியல்வாதியாகவும் கூட்டுறவு அமைச்சராகவும் பணியாற்றியவர்.
  • ராஜீவ் காந்தி (1944-1991), இந்திரா காந்தியின் மூத்த மகனாவார். தனது தாயாரின் மறைவுக்கு பிறகு இவர் இந்தியாவின் ஏழாவது பிரதமரானார்.
  • சஞ்சய் காந்தி (1946-1980), இந்திரா காந்தியின் இளைய மகனாவார். இவர்தான் தன் தாயாருக்கு பிறகு பிரதமராக எதிர்பார்க்கப்பட்டு பின்னர் விமான விபத்தில் இறந்தார்.
  • சோனியா காந்தி (1946), ராஜீவ் காந்தியின்]] மனைவியாவார். இந்திய தேசிய காங்கிரசில் 1998ஆம் ஆண்டு முதல் 2017 வரை தலைவராக பணியாற்றியவர்.
  • மேனகா காந்தி (1956), சஞ்சய் காந்தியின் மனைவியாவார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய உறுப்பினராவார். இந்திய கூட்டுறவு அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.
  • சுபத்ரா நேரு, அருண் நேருவின் மனைவியாவார்.
  • சுனில் நேரு (1946), பல்வந்த் குமார் நேருவின் மூத்த மகனாவார். பொறியாளர், பெருநிறுவன உத்தியியலாளர், மேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் மூத்த நிர்வாகியாக பணியாற்றியவர்.
  • நீனா நேரு (1946), சுனில் நேருவின் மனைவியாவார்.
  • நிகில் நேரு (1948), பல்வந்த் குமார் நேருவின் இரண்டாவது மகனாவார். மெக்கான் எரிக்சன் நிறுவனம் மற்றும் ரிசல்ட் சர்வதேச குழுவின் தலைவராவார்.
  • சம்கிதா நேரு - நிகில் நேருவின் மனைவியாவார்.
  • விக்ரம் நேரு (1952), பல்வந்த் குமார் நேருவின் இளைய மகனாவார். உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் மற்றும் கிழக்கு ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான வறுமை குறைப்பு, பொருளாதார மேலாண்மை, தனியார் மற்றும் நிதித் துறை வளர்ச்சி இயக்குநர்.

ஆறாம் தலைமுறை

ஏழாம் தலைமுறை

  • கௌசல்யா காந்தி (2014), வருண் காந்தியின்]] மகளாவார்.
  • ராய்கான் வதேரா, பிரியங்கா வதேராவின் மகனாவார்.
  • மிரயா வதேரா, பிரியங்கா காந்தியின் மகளாவார்.
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads