பிரயாக்ராஜ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரயாக்ராஜ் (Prayagraj), அதிகாரப்பூர்வமாக பிரயாக்ராஜ் என அறியப்படுகிறது, இது இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு மாநகராட்சி ஆகும். தற்போது இதன் புதிய பெயர் பிரயாக்ராஜ் ஆகும்.[6] அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும்.

இந்நகரத்தில் இந்து சமய புனித ஆறுகளான யமுனை, கங்கை ஆறு மற்றும் கண்ணுக்கு புலப்படாத சரசுவதி ஆறு இங்கு திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் கலக்கிறது.
இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. பி. சிங்) இந்நகரில் பிறந்தவர்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகம் இங்கேயே அமைந்துள்ளது. ஜவகர்லால் நேருவின் ஆனந்த பவன் எனும் கட்டிடம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.
திரிவேணி சங்கமத்தை ஒட்டி முகலாயப் பேரரசர் அக்பர் நிறுவிய அலகாபாத் கோட்டை உள்ளது. இந்நகரத்தில் பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் நிறுவிய அலகாபாத் தூண் உள்ளது.
Remove ads
போக்குவரத்து
தொடருந்து நிலையம்
கும்பமேளா திருவிழா
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆறுகள் சேருமிடமான திரிவேணி சங்கமத்தில் நடைபெறும். [7] 2019-ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா விழா 15 சனவரி 2019 (மகர சங்கராந்தி) தொடங்கி 4 மார்ச் 2019 (சிவராத்திரி) முடிய நடைபெறுகிறது. [8]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 25.45°N 81.85°E ஆகும்.[9] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 72 மீட்டர் (236 அடி) உயரத்தில் இருக்கின்றது. இங்கு யமுனை ஆறு கங்கை ஆற்றுடன் கூடுகிறது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பிரயாக்ராஜ் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 11,12,544 ஆகும். அதில் ஆண்கள் 6,00,386, பெண்கள் 5,12,158 ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,14,439 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 853 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.76% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 8,88,314 (73.03%), இசுலாமியர்கள் 2,56,402 (21.94%), மற்றவர்கள் 20.% ஆகவுள்ளனர்.[10]
Remove ads
தட்ப வெப்ப நிலை
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads