நேர்ச்சுழல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேர்ச்சுழல் (Leg spin) என்பது துடுப்பாட்டத்தில் மணிக்கட்டுச் சுழல்வீச்சின் வகைகளில் ஒன்றாகும். இந்த முறையைப் பயன்படுத்துபவர் நேர்ச்சுழலாளர் (leg spinner) (சுருக்கமாக நேராளர் (leggie)) என்று அழைக்கப்படுகிறார். ஒரு நேராளர் தனது வலது கை மணிக்கட்டைப் பயன்படுத்தி பந்தை வீசுகளத்தின் வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக எகிறிச் செல்லும் வகையில் வீசுவார். இவ்வாறு வீசப்படும் பந்து எகிறும்போது ஒரு வலது-கை மட்டையாளரின் நேர்ப்பக்கத்தில் இருந்து எதிர்ப்பக்கமாக திரும்பிச் செல்வதால் நேர்த்திருப்பம் (leg break) என்று அழைக்கப்படுகிறது. இது எதிர்ச்சுழலுக்கு நேர்மாறான வீச்சாகும்.

இடது-கை பந்துவீச்சாளர்கள் இம்முறையைப் பின்பற்றி வீசுவது இடது-கை வழமைச் சுழல் என்று அறியப்படுகிறது.[1][2]

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads