வீசுகளம் (துடுப்பாட்டம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

துடுப்பாட்டத்தில் வீசுகளம் என்பது ஆடுகளத்தின் மையத்தில் உள்ள பகுதியைக் குறிக்கும். இதன் மேற்பரப்பு தட்டையாகவும் நுண்ணிய புற்களால் மூடப்பட்டும் இருக்கும்.

Thumb
வீசுகளத்தின் பகுதிகள்

நேரடி வீச்சைத் தவிர பெரும்பாலும் அனைத்து வீச்சுகளும் வீசுகளத்தில் எகிறி மட்டையாளரை நோக்கிச் செல்லும். எனவே வீசுகளத்தின் வகையும் தன்மையும் ஒரு போட்டியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக தூசு நிறைந்த, வறண்ட வீசுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ள அணிக்கு பயன் கிடைக்கும்.[1]

நடைமுறையில் அனைத்து வீசுகளங்களும் வடக்கு-தெற்காக அமைந்திருக்கும். ஏனெனில் கிழக்கு-மேற்காக அமைத்தால் மேற்கு நோக்கி உள்ள மட்டையாளருக்கு மதிய நேரக் கதிரவனின் தாக்கம் ஆபத்தை விளைவிக்கும்.[2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads