நேவார் மக்கள்

From Wikipedia, the free encyclopedia

நேவார் மக்கள்
Remove ads

நேவார் மக்கள் அல்லது நேவா மக்கள் (Newar or Newah) Newar: नेवा:)[2] நேபாள நாட்டின் காட்மாண்டு சமவெளியில் வரலாற்றுக் காலம் முதல் வாழும் மக்கள் ஆவார்.[3] இந்தோ ஆரிய மக்களான நேவாரிகள் மற்றும் திபெத்தோ-பர்மிய மக்கள், தங்களுக்கென தனி மொழி மற்றும் பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருந்தனர். நேவாரி மொழி மற்றும் திபெத்தோ-பர்மிய மொழிகள் பேசிய நேவாரி மக்கள் இந்து சமயம் மற்றும் பௌத்த சமயங்களை கடைப்பிடித்தனர்.[4] பண்டைய பரத கண்டத்தின் இந்து சமயத்தவர்கள் போன்று, நேவார் இந்து சமய மக்களும், வர்ணாசிரம வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கின்றனர்.[5] நேவார் மக்கள், தங்கள் முன்னோர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு மற்றும் நாகரீகத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வாழ்கின்றனர்.[6][7]

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

வேத கால லிச்சாவி மற்றும் மல்ல நாட்டுப் பகுதிகளிலிருந்து நேபாளத்தின் காட்மாண்டு சமவெளிகளில் குடிபெயர்ந்த நேவாரி மக்கள் ஆரியர்களின் மொழியையும், பண்பாட்டையும் கொண்டிருந்தனர். [3] நேவாரிகள் ஆட்சி செய்த நேவார் மண்டலம், 1768இல் கோர்க்கா நாட்டவரால் வெல்லப்பட்டது.[8][9]

Remove ads

தோற்றம்

Thumb
சுயம்புநாதர் கோயில், காட்மாண்டு
Thumb
நய்யதபோலா கோயில், பக்தபூர் நகர சதுக்கம்
Thumb
பதான் அரண்மனை சதுக்கத்தில் ஒரு சிலை

நேபாளம், நேவார், நேவால் மற்றும் நேபார் எனும் சொற்கள் உச்சரிப்பில் வேறுபட்டாலும், ஒரே பொருளைக் குறிக்கும். நேபாள மொழி சமசுகிருத மொழியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நேவாரி மொழி பிராகிருத மொழியை அடிப்படையாகக் கொண்டதாகும்.[10]

நேவார் எனும் சொல்லிற்கு நேபாள நாட்டின் மண்ணின் மைந்தர்கள் எனப்பொருள் என்பதை 1654-இல் காத்மாண்டில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்பினால் அறியப்படுகிறது.[11][12] 1721-இல் நேபாளத்தில் பயணம் செய்த இத்தாலிய இயேசு சபையைச் சேர்ந்த கிறித்துவ மதப்பிரசாரகர் இப்போலித்தோ தேசிதேரி என்பவர், நேவாரிகளை நேபாள நாட்டின் பழங்குடி மக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.[13]

Thumb
பக்தப்பூர் நகர சதுக்கத்தின் தங்க வாசல் கதவு
Remove ads

சமயம்

Thumb
பசுபதிநாத் கோவில், காட்மாண்டு, நேபாளம்
Thumb
வைரோசனா புத்தரின் சிலை, காத்மாண்டு
Thumb
பௌத்த சமய தேவதை, மஞ்சுஸ்ரீ

2001ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேவாரி மக்களில் 84.13 விழுக்காட்டினர் இந்துக்களாகவும், 15.31 விழுக்காட்டினர் பௌத்த சமயத்தவர்களாகவும் இருந்தனர். மிகக் குறைந்த அளவு நேவாரி மக்கள் கிறித்தவ, இசுலாமிய சமயங்களைப் பயில்கின்றனர். பதான் நகரத்தில் அசோகர், நான்கு தூபிகள் நிறுவியுள்ளார். மகர், ராய், லிம்பு, குரூங் மக்களைப் போன்று நேவாரிகள் நேபாள மண்ணின் மைந்தர்கள் ஆவார்.

Remove ads

மொழி

நேவாரி மக்கள் தாய் மொழியான நேவாரி மொழியுடன் நேபால் பாசாவும் அறிந்துள்ளனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads