தாது கோபுரம்
தாதுகோபம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாது கோபுரம் அல்லது தூபி (ஆங்கிலம்: stupa) எனப்படுவது உடல் எச்சங்களை அல்லது தாதுப்பொருட்களை வைத்து கட்டப்படும் சிறு குன்று போன்ற அல்லது அரைக்கோள அமைப்பைக் கொண்ட வழிபாட்டு நினைவுச்சின்னம் ஆகும். தாது கோபுரம், தூபி இரண்டு சொற்களும் ஒத்த கருத்துக் கொண்ட சொற்கள் ஆகும்.[1]

தாது கோபுரம் எனப்படுவது புத்தரது சரீர எச்சங்கள், அவரால் பயன்படுத்திய பொருட்களையும் வைத்துக்கட்டப்பட்ட வழிபாட்டு நினைவுச்சின்னம் ஆகும். தூபி எனப்படுவது இந்து சமயம் மற்றும் பௌத்த ஆலயங்களின் மேலாக அமையும் கோபுரம் அல்லது உச்சி ஆகும் சமயத்தலைவர்களுக்கு அவரது எச்சங்கள் மற்றும் அவரால் பயன்படுத்திய பொருட்களையும் வைத்துக்கட்டப்பட்ட எழுப்பும் நினைவுச் சின்னங்கள் தூபிகள் ஆகும்.
Remove ads
தாது கோபுரத்தின் பகுதிகள்
தாது கோபமானது மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டது. அவை அடித்தளம், அண்டம், தூபி ஆகியன. அடித்தளமானது உயரமானதாகவும் சுற்றுப்பிகரங்களைக் கொண்டதாகவும் காணப்படும். அடித்தளத்தின் மேல் அறைகொலவடிவமாக அண்ட பகுதி காணப்படும். அண்டத்தின் மேல் தூபி காணப்படும்.
- அடித்தள பகுதிகள்
- சலபத்மழுவ
- படிகள்
- கைப்பிடிவரிசை
- காவல் சிலை
- சந்திர வட்டக்கல்
- அண்டத்தின் பகுதிகள்
- மலர் பீடம் - அடித்தளத்தில் அண்டம் ஆரம்பிக்கும் இடத்தில் அண்டத்தை சுற்றி காணப்படும் முன்று படிக்கட்டு பகுதி. இது பக்தர்களால் கொண்டுவரும் மலர்களை வைக்க பயன்படும்.
- வாசற்கதவு - இதை பெளத்த வரலாறுகளில் "அய்க்க" என்று குறிப்பட்டுள்ளது. அயக்க என்பது பாலி மொழியில் வாசக்கதவு என்பதாகும். இது தாது கோபுரத்தின் நான்கு வாசல்களுக்கும் எதிராக செதுக்கல் வேலைப்பாடுகளுடன் காணப்படும்.
- தூபியின் பகுதிகள்
- சதுரகோட்டம், அண்டத்ததுடன் உள்ள சத்ரப்பகுதி
- தேவகோட்டம், சாதுர பகுதியின் மேல் உள்ள உரிளைவடிவான பகுதி
- சிகரம், கோட்டாவின் கும்புப்பகுதி
Remove ads
தாது கோபுரத்தின் வடிவங்கள்
அண்டத்தின் வடிவை மையமாக வைத்து ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
- மணிவடிவம்
- பானைவடிவம்
- நீர்க்குமிழி வடிவம்
- நெட்குவியல் வடிவம்
- நெல்லிக்காய் வடிவம்
- தாமரை வடிவம்
தாது கோபுரத்தின் சங்கிரமம்
தாது கோபுரத்துடன் செர்ந்ததாக அமைக்கப்படும் (விரத கூடம், காவல் நிலையம், குளம், சிலைமனை அரசமரம்) இவை அனைத்தும் கூட்டுப் பெயர் சங்கிரமம் ஆகும்.
இதனையும் காண்க

மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads