நைத்திரைற்று
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நைத்திரைற்று அல்லது நைட்ரைட் (Nitrite) அயன் என்பது NO2− என்ற மூலக்கூற்று வாய்பாட்டை உடைய சமச்சீரான எதிரயன் ஆகும்.[1] இதன் இரு N-O பிணைப்புகளும் சமநீளமுடையவை.[2] நைத்திரைற்று அயனின் நேர்மின்னியேற்றத்தின் மூலம் உறுதி குறைந்த காடியான நைத்திரசுக் காடி பெறப்படும்.[3]
Remove ads
நைத்திரைற்று அயன்
நைத்திரைற்று உப்புகள்
சோடியம் ஐதரொட்சைட்டு அல்லது சோடியம் இருகாபனேற்று நீர்க்கரைசலினுள் நைத்திரசுப் புகையைச் செலுத்துவதன் மூலம் சோடியம் நைத்திரைற்று ஆக்கப்படுகின்றது.[4]
- NO + NO2 + 2NaOH (அல்லது Na2CO3) → 2NaNO2 +H2O (அல்லது CO2)
கரிம வேதியியலில் ஈரசோனியமாக்கல் தாக்கங்களில் நைத்திரைற்று உப்புகள் பயன்படுத்தப்படுகின்றன..[5]
காடி-மூல இயல்புகள்
நீர்க்கரைசல் நிலையில், நைத்திரசுக் காடி ஒரு மென்காடி ஆகும்.[6]
- HNO2
H+ + NO2−; 298 Kஇல் இத்தாக்கத்தின் காடிக் கூட்டற்பிரிகை மாறிலி 0.00046 mol dm-3 ஆகும்.[7]
Remove ads
இதனையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads