நொட்டிங்காம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நொட்டிங்காம் (Nottingham, /ˈnɒtɪŋəm/ (ⓘ) NOT-ing-əm) என்பது இங்கிலாந்தின் ஒரு நகரம் ஆகும். இது இலண்டனில் இருந்து 128 மைல்கள் (206 கி.மீ.) வடக்கேயும், பர்மிங்காமில் இருந்து 45 மைல் (72 கி.மீ.) வடகிழக்கேயும், மான்செசுட்டரில் இருந்து 56 மைல் (90 கி.மீ.) தென்கிழக்கேயும் அமைந்துள்ளது.
நொட்டிங்காம் நகரம் இராபின் ஊட் என்ற கதை மாந்தருடன் தொடர்பு கொண்டது. அத்துடன் சரிகை தயாரிப்பு, ரலே மிதிவண்டி, புகையிலைத் தொழிற்சாலைகளுடனும் தொடர்பு கொண்டது. இதற்கு 1897 ஆம் ஆண்டில் நகர நிலை கொடுக்கப்பட்டது நொட்டிங்காம் நகரம் சுற்றுலாத் துறையிலும் சிறந்து விளங்குகிறது.[6] நொட்டிங்காமின் மக்கள்தொகை 2017 இல் 329,200 ஆகும்.[7][8][9] நொட்டிங்காம் கிழக்கு மிட்லான்ட்சில் மிகப்பெரிய நகர்ப்புறமும், இங்கிலாந்தின் நடுநிலங்களில் இரண்டாவது மிகப் பெரியதும் ஆகும்.
நொட்டிங்காமில் இங்கிலாந்தின் முக்கிய விளையாட்டு மையங்கள் அமைந்துள்ளன. 2015 அக்டோபரில் இந்நகரம் 'ஆங்கிலேய விளையாட்டுக்களின் வீடு' எனப் பெயரெடுத்தது.[10] தேசிய பனிக்கட்டி மையம், \டிரெண்ட் பாலம் பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கு போன்ற பல அரங்குகள் இந்நகரில் அமைந்துள்ளன. நொட்சு கவுண்டி, நொட்டிங்காம் பொரெஸ்டு ஆகிய இரண்டு காற்பந்தாட்ட அணிகள் இங்கு இயங்குகின்றன. இரண்டு அணிகளும் இரு தடவைகள் யூஈஎஃப்ஏ கோப்பையை வென்றுள்ளன.[11]
நொட்டிங்காம் நகரில் நொட்டிங்காம் டிரெண்டு பல்கலைக்கழகம், நொட்டிங்காம் பல்கலைக்க்ழகம் என இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads