நொதிப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நொதிப்பு அல்லது நொதித்தல் (Fermentation) என்பது காபோவைதரேட்டுக்களை அமிலம் அல்லது ஆல்ககோல் ஆக மாற்றும் செயல்முறையாகும். விளக்கமாகக் கூறுவதாயின் மதுவம் அல்லது நுரைமம் (yeast) என்னும் உயிரினத்தால் காபோவைதரேட்டு ஆல்ககோலாக மாறுவதும், சில பாக்டீரியாக்கள் சில உணவு வகைகளில் தொழிற்பட்டு இலக்டிக் அமிலம் உருவாவதும் நொதித்தல் என்னும் செயல்முறையாலாகும். இயற்கையாகவே பல உணவுகளில் குறிப்பிட்ட சாதகமான சூழ்நிலையில், இந்த நொதித்தல் செயல்முறை இருக்கின்ற போதிலும், நீண்டகாலமாக மனிதர்கள் தமது தேவைக்காக இந்த நொதித்தல் செயல்முறையைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இந்த நொதித்தல் செயல்முறைக்கு ஆக்சிசன் அவசியமற்று இருப்பதுடன், இச்செயல்முறையின்போது காபனீரொட்சைட்டும் வெளியேற்றப்படும்.

இவ்வகை நொதிப்பானது சமையல், வைன் உற்பத்தி, பியர் உற்பத்தி, தேயிலை இலைகளை தேநீருக்காகப் பதப்படுத்தல் போன்ற செயல்முறைகளில் நடைபெறுகிறது.[1][2][3]
Remove ads
இதையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads