பகவான் மகாவீர் அரசு அருங்காட்சியகம்

இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள கடப்பா நகரில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் அருங்கா From Wikipedia, the free encyclopedia

Remove ads

பகவான் மகாவீர் அரசு அருங்காட்சியகம் (Bhagwan Mahavir Government Museum) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள கடப்பா நகரில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமாகும். தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய கலைப்பொருட்களைப் பாதுகாக்க இந்த அருங்காட்சியகம் 1982 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. ஒரு சமண தொழிலதிபர் நிதியளித்தார் என்பதற்காக சமணர்களின் தெய்வமான மகாவீராவின் பெயர் அருங்காட்சியகத்திற்கு வைக்கப்பட்டது. 5 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைக் கொண்ட விநாயகர், விசுணு, அனுமன் மற்றும் சிவன் ஆகியோரின் சிலைகள் அருங்காட்சியகத்திற்குள் உள்ளன.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...

கருங்கற் பாறைகள், தோலமைட்டு, சுண்ணாம்பு, வெண்கலம் போன்றவற்றால் செய்யப்பட்ட இந்த தொல்பொருட்கள் அனைத்தும் கடப்பா, ஐதராபாத்து மற்றும் கர்னூல் மாவட்டங்களின் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் காணப்பட்டன. [1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads