மோல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மோல் அல்லது மூல் (Mole) என்பது இரசாயனவியலில் ஒரு பொருள் எவ்வளவு உள்ளது என்பதைக் குறிக்கும் ஓர் அலகு. இது அடிப்படையாகக் கருதப்படும் அனைத்துலக முறை அலகுகளில் ஒன்று. தமிழில் மோல் அல்லது மூல் என்றும் உரோமன்/இலத்தீன் எழுத்தில் mol [1] என்றும் குறிக்கப்பெறுகின்றது. மோல் என்னும் பெயர் 1893இல் இடாய்ச்சுலாந்து வேதியியலாளர் வில்ஹெம் ஆஸ்ட்வால்டு (Wilhelm Ostwald)[2] என்பார் Molekül என்னும் இடாய்ச்சு மொழிச்சொல்லில் இருந்து உருவாக்கி 1897இல் அறிமுகப்படுத்தியது.[3][4]

விரைவான உண்மைகள் மோல், அலகு முறைமை ...
Remove ads

வரையறை

ஒரு பொருளின் ஒரு மோல் என்னும் அளவு, அப்பொருளின் அடிப்படைக் கூறுகளால் (அணு, மூலக்கூறு) கணக்கிடும்பொழுது, துல்லியமாக 12 கிராம் தூய கரிமம்-12 என்னும் பொருளில் எவ்வளவு அணுக்கள் உள்ளனவோ அதே எண்ணிக்கையில் உள்ள அளவு ஆகும். அதாவது ஒரு மோல் தூய 12C மிகச்சரியாக 12 கிராம் இருக்கும். ஒரு மோலில் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கையை அவோகாடரோ எண் (Avogadro constant) என்பர். இந்த அவோகாடரோ எண், 6.02214179(30)×1023 மோல்−1.[5] ஆகும். அவோகாடரோ எண்ணை 6.022x1023 (மோல்)−1 என்று அண்ணுப்படுத்தலாம்.

கரிமம் என்னும் பொருளே ஆயினும், அதில் கரிமம்-14, கரிமம்-12 போன்ற ஓரிடத்தான்கள் இருக்கக்கூடும். ஒரு பொருள் தனி அணுக்களால், ஒரே வகையான ஓரிடத்தான்களால் ஆனதாயின் கீழ்க்காணுமாறு ஒரு மோல் என்னும் அளவு கீழ்க்காணுமாறு அறியப்படும்:

  • 1 மோல் 12C = 6.02214 x1023 12C அணுக்கள் = 12 கிராம்
  • 1 மோல் 16O = 6.02214 x1023 16O அணுக்கள் = 15.9949 கிராம்

மோல் என்பது அனைத்துலக முறை அலகில் பொருளொன்றின் எண்ணிக்கையை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. பொருளின் எண்ணிக்கையை அளவிடுவதால் இது திணிவிலிருந்தும் வேறுபட்ட ஒரு கணியமாகும். பொருளொன்றின் அடிப்படைத் துகள்களின் எண்ணிக்கை அவகாதரோ எண் அளவினதாயின் அதன் அளவு 1 மோல் எனப்படும். இதன் குறியீடு mol.

Remove ads

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads