பக்கா (திரைப்படம்)
2018 ஆண்டைய தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பக்கா என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை பென் கன்ஸ்டோரிடியம் நிறுவனம் சார்பில் தி. சிவகுமார் தயாரிக்க, எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடிக்க, இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ரானி மற்றும் பிந்து மாதவி கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.
பிப்ரவரி 2017ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கப்பட்டு ஏப்ரல் 27, 2018ஆம் ஆண்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டு.
Remove ads
கதை சுருக்கம்
இந்த திரைப்படத்தின் கதை ஒரே ஊரைச் சேர்ந்த டோனி குமார் எனும் தோனி ரசிகர் விக்ரம் பிரபுக்கும், ராதா எனும் ரஜினி ரசிகை நிக்கி கல்ரானிக்கும் யாருடைய தலைவர் பெரியவர் என்பதில் மோதல் கூடவே காதல். இதனால் இவர்களின் காதல் விதி வசத்தால் கைகூடாமல் போகிறது. அதில் வெறுத்து போய் சென்னை வரும் டோனி குமார்.
காதல் தோல்வியால், குடித்து விட்டு தண்டவாளத்தில் வீழ்ந்து கிடக்கும் தோனி குமார் நதியா எனும் பிந்து மாதவியை காப்பாற்றுகிறார். பாண்டி போலவே இருக்கும் தோனி குமாரிடம் தன் காதல் கதையைச் சொல்கிறார் நதியா.
அரசன்குடியைச் சேர்ந்த பணக்கார மகளான நதியாவிற்கு, கோவில் திருவிழாவில் பொம்மை கடை வைக்கும் பாண்டி எனும் விக்ரம் பிரபு மீது காதல் வருகிறது. தனது தகுதியால் அந்த காதலை ஏற்க மறுக்கின்றார். இதனால் பாண்டி செல்லும் இடம் எல்லாம் தேடிச் சமாதானம் செய்து சென்னைக்கு அழைத்து வந்துவிடுகிறார் நதியா. அப்போது புகையிரத நிலையத்தில் நதியாவை விட்டுவிட்டு காணாமல் போகும் பாண்டி. இதனால் தற்கொலை செய்யப்போகும் நதியாவை காப்பாற்றுகிறார் தோனி குமார். இதன் பிறகு தோணி குமார் எப்படி நதியா மற்றும் பாண்டியின் காதலை குமார் எப்படி சேர்ந்து வைக்கின்றார் என்பது தான் மீதி கதை.
Remove ads
நடிகர்கள்
- விக்ரம் பிரபு - டோனி குமார் & பாண்டி
- நிக்கி கல்ரானி - ரஜினி ராதா
- பிந்து மாதவி - நதியா
- சூரி - பொம்மை
- சதீஸ்
- நிழல்கள் ரவி - நதியாவின் அப்பா
- ஆனந்த் ராஜ் - நாட்டாமை
- பாரதி கண்ணன் - பூசாரி
- சிங்கமுத்து - பூசாரி
- ரவி மரியா - மாகிச்சி மைனர்
- இமான் அண்ணாச்சி -
- ராணி - நாட்டாமையின் மனைவி
ஒலிப்பதிவு
இப்படத்தில் ஐந்து பாடல்களுக்கான இசையையும், பின்னணி இசையையும் சி. சத்யா மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் நான்கு பாடலுக்கு யுகபாரதி மற்றும் ஒரு பாடலுக்கு கபிலன் என்பவரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.
திரைப்படப்பணிகள்
2016 நவம்பர் மாதத்தில் இந்தத் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிப்பார் என்றும் இந்த திரைப்படத்திற்கு பக்கா என்றும் புதிய இயக்குநர் ஆன எஸ்.எஸ்.சூர்யா என்பவர் உறுதிசெய்தார்.[1] விக்ரம் பிரவு முதன்முறையாக இரட்டை வேட கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்று இப்படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா தெரிவித்தார். ஜனவரி 2017 ஆம் ஆண்டு முதல் கதாநாயகியாக நடிகை நிக்கி கல்ரானி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் இதற்க்கு முன் 2017ஆம் ஆண்டு வெளியான நெருப்புடா என்ற திரைபபடத்தில் விக்ரம் பிரபு உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் நிக்கி கல்ரானியின் 25 வது திரைப்படம் மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா என்பவர் நடிகர் ரஜனி காந்தின் ரசிகரும் ஆவார்.[2][3]
அவர் கூறுகையில் இந்த திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்று, சூரி, சதீஸ், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி போன்ற பல நகைச்சுவை நடிகர்கள் நடிக்கிறார்கள் என்றும்,[4] இந்த திரைப்படத்தின் முதல் படப்பிடிப்பு குற்றாலத்தில் பிப்ரவரி 1, 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 20 நாட்கள் படப்பிடிப்புக்கள் செய்ய அட்டவணை செய்யப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads