யுகபாரதி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

யுகபாரதி (Yugabharathi) ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவரின் இயற்பெயர் பிரேம்குமாராகும்.[1] இவர் 1990 களின் முற்பகுதியில் பத்திரிகைகளில் கவிதைகள் எழுதத் தொடங்கியபோது, ​​சிறந்த தமிழ்க் கவிஞரான சுப்பிரமணிய பாரதியின் நினைவாக "யுகபாரதி" என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார். கணையாழி இதழில் பொறுப்பாசிரியராகவும், ராஜரிஷி இதழில் உதவியாசிரியராகவும் இருந்துள்ளார்.

விரைவான உண்மைகள் யுகபாரதி, பிறப்பு ...

ஆனந்தம்  திரைப்படத்தில் "பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்" என்ற பாடலை எழுதியதில் பாடலாசிரியராக அறிமுகமானார். இவர் ஏறத்தாழ இரண்டாயிரம் திரைப் பாடல்களை எழுதியுள்ளார்.

Remove ads

கல்வி

இவர் 1976 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் பிரேம் குமாராகும். இவர் தஞ்சாவூரில் உள்ள மேக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியைப் பயின்றார். அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பட்டயப் படிப்பு படித்தார்.[2]

குறிப்பிடத்தக்க பாடல்கள்

ஆனந்தம் திரைப்படத்தின் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல், காதல் பிசாசே, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் ஆகிய இவரது பாடல்கள் புகழ் பெற்றவை. இவர் மைனா, ராஜபாட்டை, நீலம், கும்கி ஆகியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

Remove ads

பாடல்கள்

2002-2009

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

2010-2015

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

2016 - 2021

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

2022 - இப்போதுவரை

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

எழுதிய நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்

  • மனப்பத்தாயம்
  • பஞ்சாரம்
  • தெப்பக்கட்டை
  • நொண்டிக்காவடி
  • தெருவாசகம்
  • அந்நியர்கள் உள்ளே வரலாம்
  • மராமத்து,
  • முனியாண்டிவிலாஸ்,
  • பாதாளக்கொலுசு

கட்டுரைத் தொகுப்புகள்

  • கண்ணாடி முன்
  • நேற்றைய காற்று
  • ஒன்று
  • நடுக்கடல் தனிக்கப்பல்
  • வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்
  • அதாவது
  • நானொருவன் மட்டிலும்
  • நண்மை
  • தத்தகாரம்
  • இடம்பொருள் இசை,
  • பின்பாட்டு
  • அகத்திரை
  • நல்லார் ஒருவர்
  • ஒருபாட்டு கொஞ்சம் பின்னணி
  • நிழல் பொம்மை
  • ஊஞ்சல் தேநீர்
  • முன்னிருக்கைக்காரர்கள்
  • ஒன்று
  • நடுக்கடல் தனிக்கப்பல்
  • ஒரு மரத்துக் கள்

இவரது திரைப்பாடல்கள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. நேர்நிரை வெளியீட்டின் மூலம் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

விருதுகள்

இரண்டு முறை கவிதைக்காக தமிழக அரசின் பரிசை வென்றுள்ளார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.[3] இவருடைய படைப்புகளைப் பாராட்டி கோவை பாரதியார் பல்கலைக்கழகம் `ஐந்தமிழ் விருதை’ வழங்கியுள்ளது. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, பிலிம்பேர் விருது, ஸ்டேட்பேங்க் விருது, காசியூர் ரங்கம்மாள் விருது, பெரியார் விருது ஆகியனவும் பெற்றுள்ளார்.[4] ஐந்துமுறை ஆனந்தவிகடன் விருதும், எட்டுமுறை மிர்ச்சி விருதும் பெற்றுள்ளார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads