இரா. பஞ்சவர்ணம்
தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரா. பஞ்சவர்ணம் (R. Panchavarnam, 4 சூலை 1949 - 17 அக்டோபர் 2024) என்பவர், பண்ருட்டி நகராட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் ஊழலற்ற, வேகமான, திறன் மிக்க நிர்வாகமாக பண்ருட்டி நகராட்சியை மாற்றியதற்காக அறியப்படுகிறார். தொலைபேசி ,கை பேசி மூலம் ஊழல் முறையீடு, அல்லது குறைப்பாடு கூறல் இவர் அமுல்படுத்திய ஒரு முக்கியமான நிர்வாகக் கூறு ஆகும் என்று தி இந்து நாளேடு குறிப்பிடுகிறது.[1] 1996 முதல் 2006 வரை 10 ஆண்டுகள் நகர்மன்றத் தலைவராக இருந்த காலத்தில் பண்ருட்டி நகராட்சி கணினிமயமாக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றதால், இதர நகராட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது பல பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்றது[2].
Remove ads
பொது வாழ்க்கை
1968 இல் காங்கிரசு இயக்கத்தில் இணைந்து பின்னர் 1972 காங்கிரசு மாநில கட்சி உறுப்பினரானார். தொடர்ந்து பழைய காங்கிரசு (காமராஜ்), ஜனதா கட்சி (ப. இராமசந்திரன்) ஆகியவற்றில் மாவட்ட செயலாளராகவும், இந்திய தேசிய காங்கிரசில் தாலுக்கா காங்கிரஸ் தலைவராகவும், தமிழ் மாநிலக் காங்கிரஸ் (ஜி. கே. மூப்பனார்) கட்சியில் மாநில பொதுகுழு உறுப்பினராகவும் இருந்தவர்.
பொறுப்புகள்
- 1996 – 2001, 2001 -2006 வரை பண்ருட்டி நகர மன்ற தலைவர்.
- 2005 – 2006 மாநில திட்டக்குழு (குடிநீர் வடிகால்) உறுப்பினர்.
- 2007 – 2008 கோவை பாரதியார் பல்கலைக்கழக பாடக்குழு உறுப்பினர் (எம்பிஏ)
- 1984-2007 நெல்லிகுப்பம் ஈ.ஜ.டி.பாரி கரும்பு விவாயிகள் நிவாரணகுழு. நிறுவனர், தலைவர்
- 2007-தாவரத் ததவல் மையம் நிறுவனர், தலைவர்
இவரது நூல்கள்
இவர் ஆராய்ந்து தொகுத்து உருவாக்கி வழங்கிய நூல்களை இவ்வாறு பாகுபடுத்திக் காணலாம்
தமிழ் நூல்களிள் தாவரங்கள்
- கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள் [3]
- திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் [4]
- திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் [5][6]
- தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் [7]
- வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் [8]
- தமிழ்நாட்டு தாவரக் களஞ்சியம் சிறுதானியத் தாவரங்கள் [9]
தமிழ்நாட்டுத் தாவரங்கள்
பிற
- சிறுதானியங்களும் உணவு வகைகளும் [13]
- ஆன்மீக தாவரங்கள், பிரபஞ்சமும் தாவரங்களும் [14]
- பனை பாடும் பாடல் [15]
திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் [16]
இந்த நூலில் இவர் குறிப்பிட்டுள்ள ஆய்வுக் கருத்துகளில் சில:
திருக்குறள் பற்றியவை
- திருக்குறளில் உள்ள சொற்களில் 4558 சொள்கள் உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களாகவும், 7039 சொற்கள் மெய்யில் தொடங்கும் சொற்களாகவும் உள்ளன.[17]
- திருக்குஉறளில் வெண்சீர் வெண்டளையை மட்டும் கொண்ட ஒரே ஒரு குறள் ஒன்றே ஒன்று உள்ளது.[18]
- திருக்குறளில் ஆய்த எழுத்து இடம் பெற்றுள்ள குறள்கள் 49. அவற்றில் 175, 176, 178 ஆகிய குறள்களில் இருமுறை கையாளப்பட்டுள்ளதால் மொத்தம் ஆய்த எழுத்துக்கள் 52 முறை கையாளப்பட்டுள்ளது.[19]
- உயிர் எழுத்துகளில் [ஔ] எழுத்து திருக்குறளில் கையாளப்படவில்லை.[20]
- திருக்குறளில் ஆயிரத்துக்கு மேல் இடம் பெற்ற எழுத்துக்கள் - [ன்] 1705 முறை, [க] 1182 முறை, [ர்] 1093 முறை, [ற்] 1060 முறை, [ல்] 1011 முறை [21] இந்தச் செய்தி தமிழ் மொழியின் இயல்பினைக் காட்டுவதாக உள்ளது.
தாவரம் பற்றியவை
- அமை (மூங்கில்) - உருவ அமைஓப்பாலும், வழுவழுப்புத் தன்மையாலும் மகளிர் தோளுக்கு மூங்கில் உவமை.[22][23][24]
- அனிச்சம் - "நன்னீரை வாழி அனிச்சமே" [25] என வரும் திருக்குறள் பகுதிக்கு நல்ல நீரோடைகளை வாழ்விடமாகக் கொண்ட அனிச்ச மலரே என்று விளக்கி அனிச்ச மலர் நீரோடைக் கரைகளில் பூக்கும் என்கிறார்.[26]
- உள்ளி என்பது வெங்காயம், நரி வெங்காயம், காட்டு வெங்காயம், பூண்டு ஆகியவற்றைக் குறிக்கும். இவற்றில் அக் காலத்தில் பயன்பாட்டில் இருந்தது காட்டு வெங்காயப் பூ. இது தலை வளைந்திருக்கும். இது பெண்ணின் நாணம் போல் இருக்கும் என்று திருக்குறளை மேற்கோள் காட்டி இவர் விளக்குகிறார். "உள்ளி நறுமலர் நாணின கண்" [27] என்கிறார்.[28]
மற்றும் குன்றிமணி [29], தாமரை [30] தினை [31] முதலான பல்வேறு தாவரங்களும் இவரது விளக்கத்தில் இடம் பெற்றுள்ளன.
Remove ads
தாவரத் தகவல் மையம்
தமிழில் தாவரங்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்து வழங்கும் ஓர் இணையத் தகவல் மையத்தை தாவரத் தகவல் மையம் என்ற பெயரில் பஞ்சவர்ணம் 2007 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். இத்தகவல் மையத்தில் 11,000 இந்தியத் தாவர வகைகள் மற்றும் 5,600 தமிழ்நாட்டுத் தாவர வகைகள் பற்றியத் தகவல்கள் உள்ளன
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads