பஞ்சாப் நடுவண் பல்கலைக்கழகம்

பஞ்சாபில் உள்ள நடுவண் பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பஞ்சாப் நடுவண் பல்கலைக்கழகம் (The Central University of Punjab, CUPB) இந்திய பஞ்சாபில் பட்டிண்டாவில் அமைக்கப்பட்டுள்ள நடுவண் பல்கலைக்கழகம் ஆகும். இது நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின்படி நிறுவப்பட்டுள்ளது: இந்திய அரசின் "நடுவண் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2009". பஞ்சாப் நடுவண் பல்கலைக்கழகத்தின் ஆளுகைப்பகுதி பஞ்சாப் மாநிலம் முழுமையுமாகும்.[1] ரிசர்ச்கேட் & இசுகோப்பசு நிறுவனத்தின் தரவரிசைப்படி புதியதாக நிறுவப்பட்ட நடுவண் பல்கலைக்கழகங்களில் 2012 முதல் தொடர்ச்சியாக முதலிடத்தில் உள்ளது. நடுவண் பல்கலைக்கழகங்களில் பஞ்சாப் நடுவண் பல்கலைக்கழகத்தில் மட்டுமே விடுமுறைகளோ பருவங்களுக்கு இடையில் இடைவெளியோ இல்லாதுள்ளது. தவிரவும் இங்குதான் துணைநிலை பேராசிரியர்கள் உயிரியளவுகள்-அடிப்படையிலமைந்த வருகைப்பதிவில் பதிகையிட வேண்டியுள்ளது. ஆசிரியர் சங்கம் எதுவும் இல்லை. கல்வியாளர்களுக்கு இரண்டாண்டுகள் பயிற்சிக்காலம் இருப்பதும் இங்குதான் நடைமுறையில் உள்ளது.

நடுவண் பஞ்சாப் பல்கலைக்கழகம், பாக்கித்தானுடனோ பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர் உடனோ குழப்பிக் கொள்ள வேண்டாம் .
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

பல்கலைக்கழகம்

Thumb
பல்கலைக்கழகத்தின் நகர வளாகம்

பஞ்சாப் நடுவண் பல்கலைக்கழகம், பட்டிண்டா 2009ஆம் ஆண்டு நடுவண் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி நிறுவப்பட்டது; குடியரசுத் தலைவரின் அனுமதியை மார்ச் 20, 2009இல் பெற்றது. இதன் ஆள்புலம் பஞ்சாப் மாநிலம் முழுமைக்குமானது.

ஏப்ரல் 2009இல் துணை வேந்தர் குடியிருப்பில் அமைக்கப்பட்ட முகாம் அலுவலகத்தில் தனது செயற்பாட்டைத் துவங்கியது. நவம்பர் 2009இல் 35 ஏக்கரா பரப்பளவில் அமைந்துள்ள நகர வளாகத்திற்கு மாறியது. முதன்மை வளாகம் பதின்டா-பாதல் சாலையில் குடா சிற்றூரில் 500 ஏக்கர் நிலத்தில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. பட்டிண்டா பேருந்து நிலையத்திலிருந்து இது 21.5 கி.மீ. தொலைவில் உள்ளது.

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads