பனஜி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பனாஜி, பஞ்சிம் (ஆங்கிலம்:Panaji, போர்ச்சுகீசியம்:Pangim), இந்தியாவின் கோவா மாநிலத்தின் தலைநகர் ஆகும். இதன் போர்ச்சுகீசிய பெயர் பஞ்சிம் ஆகும். இது வட கோவா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும்.
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40,017 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பணஜி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பணஜி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
வரலாறு
1961-ஆம் ஆண்டு இந்தியா பனாஜியை ஒரு படையெடுப்பின் மூலம் இணைந்துக் கொண்டது. 1961 முதல் 1987ஆம் ஆண்டு வரை இந்திய ஆட்சிப் பகுதியாக இருந்த கோவாவின் தலைநகராகவும் 1987-இல் மாநிலமாகத் தரம் உயர்த்தப்பட்ட கோவா மாநிலத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. வட கோவா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரமும் இதுவே.
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads