பஞ்சு மிட்டாய்

From Wikipedia, the free encyclopedia

பஞ்சு மிட்டாய்
Remove ads

பஞ்சு மிட்டாய் என்பது சர்க்கரையால் நூற்கப்படும் ஒருவகை இனிப்பு ஆகும். இதன் பெரும் பகுதி காற்றாக இருப்பதால், சிறிதளவு சர்க்கரையினைக் கொண்டு பெரிய உருவம் கொண்ட பஞ்சு மிட்டாயை நூற்கலாம். சராசரியாக ஒரு பஞ்சு மிட்டாய் ஒரு அவுன்சு/30 கிராம் இருக்கும். இது குச்சியிலோ அல்லது நெகிழி பைகளிலோ விற்கப்படலாம்.[1][2][3] இது வட்டரங்குகளிலும், திருவிழாக்கூட்டங்களிலும் அதிகமாக விற்கப்படுகின்றது. செம்புற்றுப்பழம், புளுபெர்ரி, எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி, அன்னாசி, மா, மற்றும் மேலும் பல சுவைகளில் இதனை தயாரிக்கலாம். உணவு நிறமூட்டிகளைப் பயன்படுத்தி இதன் இயற்கை நிறமான வெள்ளை நிறத்தை மாற்றுவர்.

விரைவான உண்மைகள் வகை, தொடங்கிய இடம் ...
Thumb
பருத்தி மிட்டாய் இயந்திரம்
Remove ads

தமிழ்நாட்டில் தடை

2024 பெப்ரவரி துவக்கத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் பஞ்சு மிட்டாயில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருளான ரோரமைன் பி என்ற செயற்கை நிறமூட்டி ஆரஞ்சு நிறத்திற்காக பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 இன் படி தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் (ஆரஞ்சு நிற) விற்க தமிழ்நாடு அரசு தடை விதித்தது.[4]

Remove ads

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads