பஞ்ச்வாய் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

பஞ்ச்வாய் மாவட்டம்
Remove ads

கந்தகார் மாகாணம்

Thumb
கந்தகார் மாகாணத்தின் 13 மாவட்டங்கள், அடர் பச்சை நிறத்தில் பஞ்ச்வாய் மாவட்டம்

பஞ்ச்வாய் மாவட்டம் (Panjwayi district), ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தின் 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடமான பஜாரி பஞ்ச்வாய் (Bazar-i-Panjwayi) நகரமானது, மாகாணத் தலைநகரான கந்தகாருக்கு தென்மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான காபூலுக்கு தென்மேற்கே 531 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

2004ஆம் ஆண்டில் பஞ்ச்வாய் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு ஜாரி மாவட்டம் நிறுவப்பட்டது.[1] பஞ்ச்வாய் மாவட்டத்தின் வடக்கு எல்லையில் அர்க்ந்தாப் ஆறு பாய்கிறது.

2006ஆம் ஆண்டில் இம்மாவட்ட மக்கள் தொகை 77,200 ஆகும். இம்மாவட்டத்தில் கல்வி நிலையங்கள் பற்றாக்குறையால், பெரும்பாலான மக்கள் வேளாண்மைத் தொழில் செய்கின்றனர். ஹெல்மண்ட் மற்றும் அர்க்ந்தாப் பள்ளத்தாக்குத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நீரே இம்மாவட்டத்தின் நீர் ஆதாரம் ஆகும்.[2]

Remove ads

அமைவிடம்

பஞ்ச்வாய் மாவட்டத்தின் தென்மேற்கில் எல்மந்து மாகாணம், மேற்கே மேவந்த் மாவட்டம், வடக்கே ஜாரி மாவட்டம், கிழக்கே அர்கந்தாப் மாவட்டம், கந்தகார் மாவட்டம் மற்றும் தாமன் மாவட்டங்களும், தெற்கே ரெக் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

ஆப்கானித்தான் போர்

2001-2021 ஆப்கானித்தான் போரின் போது, பஞ்ச்வாய் மாவட்டப் பகுதிகளில் நேட்டோ சார்பில் கனடா நாட்டுப் படைகள், தாலிபான்களுக்கு எதிராகப் போரிட்டது. இப்போரில் 500 தாலிபான்கள் கொல்லப்பட்டனர்.[3]10 சூலை 2021 அன்று பஞ்ச்வாய் மாவட்டம் தாலிபான்கள் கைப்பற்றினர்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads