கந்தகார் மாகாணம்

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மாகாணம் From Wikipedia, the free encyclopedia

கந்தகார் மாகாணம்
Remove ads

கந்தகார் மாகாணம், ஆப்கானிஸ்தானின் மாகாணங்களில் ஒன்று. இது பாக்கித்தான் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த மாகாணத்தின் மேற்கில் ஹெல்மண்டு மாகாணம், வடக்கில் ஒரூஸ்கான் மாகாணம், கிழக்கில் சாபுல் மாகாணம் ஆகியன உள்ளன. இதன் தலைநகரம் கந்தகார் ஆகும். இம்மாகாணம் பாகிஸ்தான் நாட்டின் எல்லைப்புறத்தில் உள்ளது.

விரைவான உண்மைகள் கந்தகார் Kandahar Pashto: کندهار ولايت Persian: ولایت قندهار, நாடு ...
Remove ads

இந்த மாகாணத்தில் 18 மாவட்டங்கள் உள்ளன. மொத்தமுள்ள 1,000 கிராமங்களில், ஏறத்தாழ 1,151,100 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பஷ்தூன் மக்கள் பெரும்பான்மையினர் ஆவர். தாஜிக், கசாரா மக்கள், உஸ்பெக் மக்கள், பலூச் மக்கள் ஆகியோர் கந்தகாரில் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தின் ஆளுநராக தோர்யலாய் மேசா நியமிக்கப்பட்டுள்ளார்.

Remove ads

பெயர்

கந்தகார் என்ற சொல் அலெக்சாந்தரின் பெயரில் இருந்து மருவியதாகக் கருதப்படுகிறது. அலெக்சாந்தரியா என்ற பெயர் பஷ்தூ மொழீயில் இஸ்கந்தரியா என்று மருவியது. அதில் இருந்தே கந்தகார் என்ற சொல் தோன்றியதாக கருதுகின்றனர்.[2] இங்கு அலெக்சாந்தரை நினைவுகூறும் கோயிலும், கிரேக்க, அரமேய மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.[3]மகாபாரதம் இதிகாசம் கூறும் காந்தார நாடு இப்பகுதியில் இருந்தது. மேலும் இப்பகுதியை இந்தோ கிரேக்கர்கள் கிமு 180 முதல் கிபி 10 வரை ஆண்டனர். அதனை முன்னிட்டு கிரேக்கர்கள் இதனை காந்தகார் என்று அழைத்தனர்.

Remove ads

அரசியல்

Thumb
அமெரிக்கத் தூதரான ரியான் குரோக்கருடன், மாகாண ஆளுநர் தோர்யலாய் வேசா

2003ஆம் ஆண்டு வரை, குல் அகா ஷேர்சாய் என்பவர் ஆளுநராக இருந்தார். பின்னர், இவர் ஜலாலாபாத்துக்கு பதவிமாற்றம் செய்யப்பட்டார். பின்னர், சில காலத்துக்கு யூசுப் பஷ்தூன் என்பவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் தேர்தலுக்குப் பின்னர், யூசுப் பஷ்தூனுக்கு நகர்ப்புற அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அசாதுல்லா காலித் என்பவர் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2008ஆம் ஆண்டில் ரகமதுல்லா ரவுஃபீ என்பவர் ஆளுநரானார்.[4]

Remove ads

மக்கள்

இங்கு ஏறத்தாழ 1,151,100 மக்கள் வசிக்கின்றனர். [1] இவர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் ஆவர். இவர்களில் பஷ்தூன் மக்கள் பெரும்பான்மையினர் ஆவர். தாஜிக் இன மக்கள், கசாரா மக்கள், உஸ்பெக் மக்கள், பலூச் மக்கள் ஆகியோரும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். இங்கு வாழும் மக்கள் பஷ்தூ மொழி பேசுகின்றனர். நகர்ப்புறங்களில் பாரசீகம் இரண்டாம் மொழியாக பயன்பாட்டில் உள்ளது.

மாவட்டங்கள்

Thumb
கந்தகார் மாகாணத்திலுள்ள மாவட்டங்கள்

இந்த மாகாணத்தில் 18 மாவட்டங்கள் உள்ளன. அவை ஆர்காந்தாப் மாவட்டம், அர்கிஸ்தான் மாவட்டம், தாமன் மாவட்டம், கோரக் மாவட்டம், கந்தகார் மாவட்டம், காக்ரேஸ் மாவட்டம், மரூஃப் மாவட்டம், மைவண்டு மாவட்டம், மியனிஷின் மாவட்டம், நேஷ் மாவட்டம், பஞ்சவாய் மாவட்டம், ரேக் மாவட்டம், ஷா வாலி கோட் மாவட்டம், ஷோராபாக் மாவட்டம், ஸ்பின் போல்தக் மாவட்டம், ஜாரி மாவட்டம் ஆகியன.

போக்குவரத்து

Thumb
கந்தகார் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் நிற்கும் பயணியர் வானூர்தி

கந்தகாரின் கிழக்குப் பகுதியில் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. இது இராணுவத்தினருக்கும், குடிமக்களுக்கும் பயன்படுகிறது. இங்கிருந்து துபாய், பாகிஸ்தான், இரான் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையத்தை ஐக்கிய அமெரிக்கா கட்டியது.

இங்கு தொடருந்து போக்குவரத்து இல்லை. சரக்குகள் கார்களிலும், டிரக்குகளிலும் கொண்டு செல்லப்படுகின்றன.

கந்தகாரில் இருந்து மாகாணத்தில் உள்ள மற்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கந்தகாருக்குள்ளேயே சென்று வரவும் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்கள் தங்கள் சொந்த வாகனங்களிலும் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

Remove ads

பொருளாதாரம்

இந்த மாகாணத்தில் நீர்ப்பாசன வசதி கொண்ட தோட்டங்கள் உள்ளன. திராட்சை, தர்பூசணி, மாதுளை உள்ளிட்ட பழங்கள் விளைகின்றன. பாக்கிஸ்தான், இரான் ஆகிய நாடுகளுடன் அதிக வர்த்தகம் நடைபெறுகிறது. கந்தகாரில் உழவு நிலங்களும் உள்ளன.[5] கந்தகாரின் வடக்கில் தாஹ்லா அணை உள்ளது.

கல்வி

இந்த மாகாணத்தில் 7% மக்கள் கல்வி கற்றிருக்கின்றனர். (2011 கணக்கெடுப்பு).[6] 2011ஆம் கணக்கெடுப்பை முந்தைய கணக்கெடுப்புகளோடு ஒப்பிடும்போது, பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரிய வந்தது.[6]

இங்கு கந்தகார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் ஐந்தாயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் 300 மட்டுமே பெண்கள் ஆவர்.[7]

இதனையும் காண்க

சான்றுகள்

இணைப்புகள்

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads