பஞ்ச சம்ஸ்காரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பஞ்சசம்ஸ்காரம் என்பதற்கு தகுதியை அளிக்கும் ஐந்து சடங்குகள் என்று பொருள். இராமானுசர் நிறுவிய ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், பாஞ்சராத்திர ஆகமத்தின் படி, தகுதி உடைய ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரியரால் மட்டுமே பஞ்சசம்ஸ்கார சடங்குகள் வைணவர்களுக்கு செய்விக்கப்படுகிறது.
இராமானுஜர் மூலம் திருமால் திருவடியை அடைய விருப்ப உடைய, ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஆண், பெண், சாதி வேறுபாடு இன்றி பஞ்சசம்ஸ்கார சடங்குகள் செய்விக்கப்படுகிறது.[1]
Remove ads
சடங்கு முறைகள்
பஞ்ச சம்ஸ்காரம் சடங்கினை இராமனுசரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மாசனாதிபதிகளின் வழிவந்த ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரியார்களால் மட்டுமே பஞ்சசம்ஸ்கார சடங்குகள் சீடர்களுக்கு செய்விக்கப்படுகிறது.
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை பின்பற்ற விரும்பும் எவருக்கும், ஆண், பெண் வேறுபாடு மற்றும் சாதி வேறுபாடு இன்றி செய்விக்கப்படுகிறது. பஞ்ச சம்ஸ்கார சடங்கு செய்து கொள்வதன் மூலம் தாங்கள் இராமானுஜருடன் தொடர்புடையவர்கள் என்றும், அவர் மூலம் மோட்சத்தின் போது திருமாலடியை எளிதல் அடைய இயலும் என்பது நம்பிக்கை ஸ்ரீவைஷ்ணவர்களின் நம்பிக்கை. பஞ்ச சம்ஸ்கார சடங்குகள் முறையே: [2][3]
1. சங்கு சக்கர முத்திரை பதித்தல்
அக்கினியில் சூடேற்றப்பட்ட சக்கரம் மற்றும் சங்கு முத்திரைகளை, பக்தர்களின் வலது மற்றும் இடது தோள்பட்டையின் மேல் புறத்தில் ஆச்சாரியர் பதிப்பர்.
2. திருமண் காப்பிடுதல்
சீடரின் நெற்றி, கழுத்து, மார்பு, முதுகு, தோள் பட்டை, வயிறு ஆகிய ஆறு இடங்களில் 12 திருமண் காப்புகளை, விஷ்ணுவின் 12 சிறப்புப் பெயர்களை கூறி ஆச்சாரியர் காப்பிடுவார்.
3. தாஸ்ய நாமம் சூட்டுதல்
ஆண் பக்தர்களுக்கு இராமானுஜ தாசன் என்றும்; பெண் பக்தர்களுக்கு இராமானுஜ தாசி என்றும் சிறப்பு பெயரிடுவர். விஷ்ணு பக்தரின் பிறப்புப் பெயர் வாசுதேவன் என இருப்பின் பஞ்ச சம்ஸ்காரத்தின் போது, அடியேன் வாசுதேவ இராமானுஜ தாசன் என்று பெயரிடுவர். இராமானுஜசருடன் தாங்கள் தொடர்புடையவர்கள் என்பதை குறிக்க இராமானுஜ தாஸ்யப் பெயர் புதிதாக ஆச்சாரியரால் சூட்டப்படுகிறது.
4. மந்திர தீட்சை அளித்தல்
மூன்று தெய்வீக புனித இரகசியத் திரய மந்திரங்கள் (இரகசியத்திரயம்) எனும் எட்டெழுத்து மந்திரம் , துய மந்திரம் மற்றும் சரம சுலோகம் ஆகிய மந்திர தீட்சை பெறும் சீடரின் காதில் மட்டும் கேட்கும் படி ஆச்சாரியர் மந்திர தீட்சை அளிப்பர்.
5. யக்ஹம்
திருமாலை வழிபடும் முறைகள், உணவு நியமம், மற்றும் பிற வைணவ அடியார்களுடன் நடந்து கொள்ளும் முறைகளை சீடருக்கு ஆச்சாரியர் விளக்குவார்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads