பட்டினப்பிரவேசம்
கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்டினப்பிரவேசம் (Pattina Pravesam) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், மீரா, சிவசந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் மூலம் மீரா, டெல்லி கணேஷ், ஸ்வர்ணா, சரத் பாபு, ஜெயஸ்ரீ தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.
Remove ads
கதை
கிராமத்திலுள்ள ஒரு குடும்பத்தில் விதவையான தாய், தனது நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறாள். அவர்கள் அனைவரும் நகரத்தில் வாழ ஆசைப்பட்டு, கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருகின்றனர். குடும்பத்திலுள்ள அனைவரும் நகர வாழ்க்கையில் ஈடு கொடுக்க முடியாமல் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனால் அனைவரும் கிராமத்திற்கே சென்றுவிடுகின்றனர்.[1]
நடிப்பு
- டெல்லி கணேஷ் - முருகன்
- ஜெய்கணேஷ் - சரவணன்
- சிவசந்திரன் - குமரன்
- காத்தாடி ராமமூர்த்தி - வெகுளி தண்டபாணி
- சரத் பாபு
- மீரா[2]
தயாரிப்பு
பட்டினப் பிரவேசம் திரைப்படத்தை எழுதி இயக்கியவர் கைலாசம் பாலசந்தர். இது 1977இல் விசு எழுதிய மேடை நாடகத்தின் கதையாகும்.[3][4][5] பிரேமாலயா பிலிம்ஸின் ஆர். வெங்கட்ராமன் இப் படத்தை தயாரித்துள்ளார்.[3] இதில், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன், மற்றும் சரத் பாபு நடித்துள்ளனர்.[6] கணேஷ் இப் படத்தின் மூலமான நாடகத்திலும் நடித்துள்ளார்.[3] மற்றும் அதே கதா பாத்திரத்தில் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[7] காத்தாடி ராமமூர்த்தி, 'வெகுளி தண்டபாணியாக' நாடகத்திலும், அதே கதா பாத்திரத்தை திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[8]
பாடல்கள்
இப் படத்திற்கு இசை அமைத்தவர் ம. சு. விசுவநாதன் மற்றும் பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.[9][10] இப் படதில் வரும் "வான் நிலா நிலா" என்னும் பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.[3] "வான் நிலா நிலா" பாடல் உருவான விதத்தைப்பற்றி கூறும் பொழுது, ம. சு. விசுவநாதன் அவர்கள் இப்பாடலின் சந்தம் பாட்டெழுதுவதற்கு கடினமானது, சந்தத்தை கேட்டுவிட்டு கண்ணதாசன் அவர்கள் பாடல் எழுதினார். பாடல் வரிகளை கேட்டுவிட்டு மேலும் சில "லா"க்கள் விடுப்பட்டுவிட்டன என்று கூறியுள்ளார். என்ன "லா" என்று கண்ணதாசன் கேட்டதற்கு, ம. சு. விசுவநாதன் அவர்கள் பாதர் இன் லா, மதர் இன் லா, சன் இன் லா விடுப்பட்டது என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.[11]
Remove ads
வெளியீடும் வரவேற்பும்
பட்டினப் பிரவேசம் 1977 செப்டம்பர் 9 அன்று வெளியிடப்பட்டது.[12] ஆனந்த விகடன் பத்திரிகை இப்படத்திற்கு 100க்கு 52 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads