பண்பாட்டு மாற்றம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

குறிப்பிட்ட ஒரு மக்கட் குழுவினருக்கு உரிய பண்பாட்டில், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதைப் பண்பாட்டு மாற்றம் எனலாம். பண்பாடு என்பது இயக்கத் தன்மை கொண்டது இதில் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. கற்றறிந்த நடத்தைகளின் தொகுப்பே பண்பாடு என்பதால், புதியவற்றைக் கற்றுக் கொள்ளும்போது மாற்றம் நிகழ்கிறது. இது, குறிப்பிட்ட சில பண்பாடுகளுக்கு மட்டுமன்றி எல்லாப் பண்பாடுகளுக்குமே பொருந்தும் ஒரு விடயம் ஆகும்.

போக்குவரத்து வசதிகள், தொலைத் தொடர்பு வசதிகள் ஆகியன மிகவும் குறைவாக இருந்த காலத்தில் மாற்றங்கள் மிக மெதுவாகவே ஏற்பட்டன. இன்றைய காலகட்டம் பல துறைகளிலும் வேகமான மாற்றங்களைக் காணும் காலகட்டம். அறிவியல் வளர்ச்சியால், போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு வசதிகள் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளன. இதனால், பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட மக்களிடையே தொடர்புகள் அதிகரித்துள்ளன. ஒரு தரப்பாருடைய பண்பாட்டிலிருந்து பல விடயங்களை மறு தரப்பார் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் பண்பாட்டு மாற்றம் தவிக்க முடியாததாகிறது.

பண்பாடு என்பது பல்வேறு நடவடிக்கைகளின் வெறும் தொகுப்பு அல்ல. அந்த நடவடிகைகள், ஒன்றுக்கொன்று தொடர்பின்றித் தனித்தனியாகச் செயற்படுவதில்லை.

பண்பாடு என்பது மிகவும் இணக்கமுற்ற, ஒருங்கிணைந்த ஒரு ஒன்றியமாகும். இதனுள் உள்ள கூறுகள் அனைத்தும் செயல்நிலையில் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன. ஒவ்வொரு கூறும், பண்பாடு என்னும் முழுமைக்குள், மிகவும் ஏற்ற நிலையில் பொருத்தப்பட்டுள்ளது.[1]

இதனால் ஒரு அம்சத்தில் நிகழும் மாற்றங்கள், பண்பாட்டின் அனைத்துக் கூறுகளிலும் தாக்கங்களை உண்டாக்குகின்றன. பண்பாட்டின் பல்வேறு கூறுகளுக்கும் இடையே உள்ள பிணைப்பு பண்பாட்டு ஒருங்கிணைப்பு (Integration of Culture) எனப்படுகிறது. பண்பாட்டு ஒருங்கிணைப்பு இறுக்கமாக இருக்கும் சமுதாயங்கள் வேண்டாத மாற்றங்களை இலகுவில் ஏற்றுக் கொள்வதில்லை.

பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்வதற்குரிய வழிமுறைகளை அறிஞர்கள் பகுத்தாய்ந்து வகைப்படுத்தியுள்ளனர். அவற்றுட் சில:

Remove ads

இவற்றையும் பார்க்கவுzம்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads