பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius XV; 9/15 ஜனவரி 1554 – 8 ஜூலை 1623), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 9 பெப்ரவரி 1621 முதல் 1623இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார்.
கர்தினால் அலெக்சாண்ரோ, மடல்கள் எழுதுவதில் பேருவகை கொள்வார். 1621 பிப்ரவரியில் புதிய பாப்புவாக தேர்தெடுக்கப் படும்போதே நோயுற்றவராயிருந்தார். இதனால், பாப்புக்குரிய பணியாற்றும் நிலையில் அவர் இல்லை. எனினும் புதிய பாப்புவாக தேர்தெடுப்பது பற்றிய சில ஆனைகளைப் பிறப்பித்தார். திருச்சபை அமெரிக்கா, ஆசியா, மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பரவி வந்தது. இந்த நாடுகளில் திருமறைப் பரப்புபணியாற்றுவதற்காக புதிய அமைப்புகளை நிறுவினார்.
திருச்சபையின் பெரும் புனிதர்களுல் சிலரான அவிலாவின் புனித தெரேசா, பிரான்சிஸ் சவேரியார், லொயோலா இஞ்ஞாசி, பிலிப்பு நேரி ஆகியோருக்கு புனிதர் பட்டமும் அலோசியுஸ் கொன்சாகாவுக்கு அருளாளர் பட்டமும் அளித்தவர் இவர். 1623 ஜீலை 8 ம் நாள் இறைவனடி சேர்ந்தார்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads