பனங்கிழங்கு

From Wikipedia, the free encyclopedia

பனங்கிழங்கு
Remove ads

பனம் விதைகள் முளைக்கும்போது, நிலத்துட் செல்லும் வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்கு உருவாகின்றது. இதுவே பனங்கிழங்கு ஆகும். ஒரு முனை கூராகவும், மறு முனை சுமார் ஓர் அங்குலம் விட்டம் கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய கூம்பு வடிவான இக்கிழங்கு ஓர் அடி வரை நீளமானது.

Thumb
தமிழகப் பனங்கிழங்குகள்

பனை மரத்தில் உள்ள நுங்கு பனை பழமாக மாறி அதன் பின்பு அதை வெட்டி எடுத்து பனைபழத்தை பிரித்து மூன்று மூன்றாக இருக்கும் அதை தனித்தனியாக பிரித்து வெயிலில் காய வைத்து பின்பு ஒரு மணல் திருட்டு போல் உருவாக்கி அதில் இந்த பனை பழத்தை காய்ந்த பனைபழத்தை முளைப்பதற்கு ஏற்றாலும் போல் அதில் வரிசையாக நட்டு பின்பு சுற்றி மணலை போட்டு அதில் வட்டமாக பாத்தி பிடித்து தண்ணீர் ஊற்றிக் கொண்டே வரவேண்டும் நன்கு மிதித்து மிதித்து தண்ணீர் ஊற்ற வேண்டும் காலப்போக்கில் அது முளைக்க ஆரம்பித்து விடும் பின்பு மூன்று மாதம் கழித்து அதைத் தோண்டி பார்த்தால் பனங்கிழங்கு தயாராக இருக்கும் இவ்வாறு தான் பனங்கிழங்கு உற்பத்தி செய்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் பனை மரங்கள் இருப்பதால் அங்கு மிகவும் பிரபலமாக உள்ளது

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads