பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம்

From Wikipedia, the free encyclopedia

பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம்
Remove ads

பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union, சுருக்கமாக ஐ. டி.யூ) ஐ.நாவில் இன்றும் நடப்பில் இருக்கும் ஒரு பழமை வாய்ந்த அமைப்பாகும். 1865, மே 17 அன்று பாரிசில் பன்னாட்டு தந்தி ஒன்றியம் என நிறுவப்பட்டது. இவ்வமைப்பு மாறிவரும் காலம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்கி இன்று தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களில் ஐ.நாவின் ஒருங்கிணைக்கும் அமைப்பாகவும் உலகளவில் பன்னாட்டு அரசுகளும் தனியார் அமைப்புகளும் இணைந்து புதிய பிணையங்களையும் சேவைகளையும் மேம்படுத்தும் மையமாகவும் விளங்குகிறது.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, வகை ...
Thumb
பெர்ன், சுவிட்சர்லாந்தில்உள்ள நினைவுச்சின்னம். பதிக்கப்பட்டுள்ள உரை: "Union Télégraphique Internationale fondée à Paris en 1865 sur l'initiative du gouvernement français. Érigé par décision de l'Union Télégraphique prise à la conférence internationale de Lisbonne en 1908." (தமிழில்: "பிரெஞ்சு அரசின் முயற்சியால் 1865ஆம் ஆண்டு பாரிசில் பன்னாட்டு தந்தி ஒன்றியம் நிறுவப்பட்டது. இந்த நினைவுச்சின்னம் 1908ஆம் ஆண்டு லிசுபனில் நடந்த தந்தி ஒன்றியத்தின் பன்னாட்டு மாநாட்டின் முடிவின்படி எழுப்பப்பட்டது.")
Remove ads

ஐ.டி.யூ உள்ளமைப்புகள்:

Thumb
ஐ.டி.யூ தலைமையகம், ஜெனிவா

அலைவழி தொடர்பு (ITU-R): உலகளவில் அலைத்தொகுதிகள் (spectrum) மேலாண்மை மற்றும் செயற்கைக்கோள் சுற்றுப்பாதை ஒருங்கிணைப்பு.

சீர்தரப்படுத்தல் (ITU-T): ஐ.டி.யூவின் சீர்தரப்படுத்தல் இவ்வமைப்பின் கூடுதலாக அறியப்பட்ட மற்றும் பழமையான செயல்பாடாகும்.1992 வரை இந்த உள்கட்டமைப்பு பன்னாட்டு தந்தி மற்றும் தொலைபேசி கலந்தாய்வுக் குழு (சிசிஐடிடி) CCITT(பிரெஞ்சு பெயரான "Comité consultatif international téléphonique et télégraphique" என்பதன் சுருக்கம்) என அறியப்பட்டு வந்தது.

மேம்படுத்தல் (ITU-D): உலகெங்கும் தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான,நீடித்த மற்றும் வாங்குகின்ற வகையில் கிடைத்திட உதவிடும் பொருட்டு இவ்வமைப்பு ஏற்பட்டது.

ITU TELECOM: இது தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் தலைசிறந்த தொழிலகங்கள், அரசுகளின் அமைச்சர்கள், கட்டுப்படுத்தும் ஆணையர்கள் மற்றும் தொடர்புடைய பிறரை ஒன்றிணைத்து கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் பிற வாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கம் கொண்டது.

செயலர் நாயகம் தலைமையில் இயங்கும் ஓர் நிரந்தர பொது செயலகம் ஒன்றியத்தின் மற்றும் உள்ளமைப்புகளின் அன்றாட அலுவல்களை மேற்பார்வை செய்கிறது.

Remove ads

பன்னாட்டுத் தொலைத்தொடர்பு உலக மாநாடு

  • பன்னாட்டுத் தொலைத்தொடர்பு உலக மாநாடு டிசம்பர் மாதம், 2012 இல் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் உள்ள துபாய் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை மாற்றங்களை பற்றி உறுப்புநாடுகளுடன் விவாதித்தது. இந்த மாநாட்டில் 193 நாடுகளை சேர்ந்த தொலைத்தொடர்பு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
  • இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் 1988 ஆம் ஆண்டு நடைபெற்றது.


வெளியிணைப்புகள்

யூட்டியூப் அலைவரிசை


Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads