1865
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1865 (MDCCCLXV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.


Remove ads
நிகழ்வுகள்
- மார்ச் - இலங்கையின் உதவி ஆளுநராக சேர் ஹேர்க்குலெஸ் ரொபின்சன் பதவியேற்றார்.
- ஏப்ரல் 9 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரொபேர்ட் லீ தனது 26,765 பேருடனான படைகளுடன் வேர்ஜீனியாவில் சரணடைந்தார்.
- ஏப்ரல் 14 - ஆபிரகாம் லிங்கன் வாஷிங்டன், டிசியில் சுடப்பட்டார்.
- ஏப்ரல் 27 - 2,300 பயணிகளுடன் சென்ற சுல்தானா என்ற நீராவிக்கப்பல் மிசிசிப்பி ஆற்றில் மூழ்கியதில் 1,700 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 5 - ஜெபர்சன் டேவிஸ் கடைசித் தடவையாக தனது 14 அமைச்சரவை உறுப்பினர்களை ஜோர்ஜியாவில் சந்தித்தார். கூட்டமைப்பு அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
- மே 10 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் கூட்டணிப் படைகளால் கைப்பற்றப்பட்டார்.
- மே 17 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ( International Telegraph Union) ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் (International Telecommunication Union) எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- மே 23 - வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர்]] முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.
- ஜூலை 4 - ஆலிஸின் அற்புத உலகம் நூல் வெளியிடப்பட்டது.
- ஜூலை 7 - ஆபிரகாம் லிங்கன் கொலையில் குற்றவாளிகளான நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்.
- நவம்பர் 11 - டீஸ்ட்டா ஆற்றின் கிழக்குப் பகுதிகளை பூட்டான் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்குக் கொடுத்தது.
- டிசம்பர் 24 - அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றபின் அப்போதைய ஜனாதிபதி ஆன்ட்ரூ ஜாக்சன் கருப்பினத்திவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதென முடிவுசெய்தார். அதனை எதிர்த்து கருப்பினத்தவர்களைக் கொலை செய்ய கு கிளக்சு கிளான் என்ற அமைப்பை அமெரிக்க வெள்ளையர்கள் ரகசியமாக உருவாக்கினர்.
Remove ads
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
பிறப்புகள்
- ஜனவரி 28 - பால கங்காதர திலகர் இந்திய சுதந்திர போராட்டவீரர்
- மே 28 - மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (இ. 1961)
இறப்புகள்
- ஏப்ரல் 15 - ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் (பி. 1809)
1865 நாட்காட்டி
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads