பயிரிடும்வகை

From Wikipedia, the free encyclopedia

பயிரிடும்வகை
Remove ads

பயிரிடும்வகை (cultivar)[nb 1] அல்லது பயிரினவகை, தாவரப் பரவலின்போது பேணப்பட வேண்டிய தேர்ந்ந்தெடுத்த பான்மைகள் கூட்டாக அமைந்த தாவரங்களின் தொகுப்பாகும். பயிரிடும்வகை என்பது பயிரிடப்படும் தாவரங்களின் பெயரீட்டுக்கான பன்னாட்டு விதிமுறைப்படி, பயிரிடப்படும் தாவரங்களின் அடிப்படை வகைபாட்டுக் கருத்தினமாகும். பெரும்பாலான பயிரிடும்வகைகள் பயிரீட்டின்போது தோன்றியவையே; சில மட்டும் காட்டுவகையில் இருந்து சிறப்பு தெரிந்தெடுப்புகளில் இருந்து உருவாகின.

Thumb
தோட்டக்கலையில் பயிரிடப்பட்டு பெறப்பட்ட யாங்கீ டூடில் ரோசா
Thumb
காட்டு நீல யாண்டர் எனப்படும் ஒரு காட்டுவகை, ரோஜாசாத் தாவரம்

பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீட்டின் வரைவிலக்கணப்படி, பயிரிடும்வகை என்பது ஒரு குறிப்பிட்ட இயல்புக்காகவோ, அல்லது பல இணைந்த இயல்புகளுக்காகவோ தெரிவு செய்யப்பட்டு, தகுந்த இனப்பெருக்க முறைகள் மூலம் பெருக்கமடையச் செய்யும்போது, அவ்வியல்புகளை தனித்தன்மையுடையனவாகவும், சீராகவும், நிலையானதாகவும் கொண்டிருக்கும் தாவர இனமாகும்.[1].

உரோசாக்களைப் போன்ற அழகு தோட்டத் தாவரங்கள் வேண்டிய வண்ணத்துக்காகவும் வடிவத்துக்காகவும் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கத்தால் தோன்றியவையாகும். உலகின் வேளாண் உணவுப் பயிர்கள் பெரும்பாலும் பயிரிடுவகைகளே. இவை மேம்பட்ட விளைச்சல், மணம், நோயெதிர்ப்புத்திறன் போன்ற பான்மைகளுக்காக தேர்ந்தெடுத்த வளர்ப்பினங்களே. மிகச் சில காட்டு மூலவகைகளே இப்போது உணவுக்காகப் பயன்படுகின்றன. காட்டில் வளர்க்கப்படும் மரங்களும் கூட, அவற்றின் மேம்பாடான தரத்துக்கும் மரக்கட்டைக்குமான சிறப்புத் தேர்ந்தெடுப்பு வளர்ப்பினங்களே.

Thumb
ஆசுட்டியோசுபெர்மம் வெளிர்சிவப்பு பூமடல்கள்
கண்கவர் வண்ணப் பூக்களுக்காக தெரிவு செய்யப்படும் பயிடும்வகை

பயிரிடும்வகைகள் உறுப்புகளாக அமைந்த இலிபர்ட்டி கைடு பெய்லியின் பெருங்குழுவான ஆக்கப்பயிர்கள்,[2] முதன்மையாக மாந்தன் நினைப்போடு தெரிந்தெடுத்து உருவாக்கிய செயல்பாட்டினால் தோன்றியவையாக வரையறுக்கப்படுகின்றன.[3] பயிரிடும் வகை தாவரவகயைப் போன்றதல்ல.[4] தாவரவகை ஒரு சிற்ரினத்துக்குக் கீழே அமையும் வகைபாட்டுத் தரவரிசையாகும். தாவரவகைகளையும் பயிரிடும்வகைகளையும் பெயரிடும் விதிகளில் வேறுபாடுகள் உள்ளன. அண்மைக்காலத்தில், தாவர வளர்ப்பாளர் உரிமைகளுக்காக, தரப்படும் தாவரப் பதிவுரிமங்களால் பயிரிடும்வகைகளின் பெயரீடு மேலும் சிக்கலாகி வருகிறது.[5]

தாவரப் புதுவகைகளின் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் (UPOV – French: Union internationale pour la protection des obtentions végétales) தாவரப் பயிரிடுவகைகளுக்கான பாதுகாப்பை நல்குகிறது. வணிக நடைமுறையில், புதிய பயிரிடும்வகைகளை அறிமுகப்படுத்தும் தனியர்களோ நிறுவனங்களோ இந்த ஒன்றியத்தால் பயிரிடும்வகை தெளிவானதாகவும் சீரானதாகவும் நிலைப்புடையதாகவும் அமைதல் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறது. பயிரிடும்வகைகள் தனித்ததாக அமைய, பிறவகையில் இருந்து முற்றிலும் தனித்த பான்மைகளை உடையதாக இருக்கவேண்டும். சீராகவும் நிலைப்புடனும் அமைய, பயிரிட்டும்வகைகள் இப்பான்மைகளைத் தொடர்பரவலின்போது தக்கவைத்துக்கொள்ளவேண்டும்.

பயிரீட்டுத் தாவர வகைபாட்டில் பயிரிடும்வகைகளைப் பெய்ரிடுவதற்கான முதன்மை வாய்ந்த கூறுபாடும் அதன் சரியான பெயரிடுதலும் பயிரிடப்படும் தாவரங்களின் பெயரீட்டுக்கான பன்னாட்டு விதிமுறைத் தொகுப்பின் விதிகள், பரிந்துரைகளின்படி வரையறுக்கப்படுகின்றன (ICNCP, இது பொதுவாக பயிரிடப்படும் தாவர விதிமுறைத் தொகுப்பு என வழங்குகிறது). ஒவ்வொரு பயிரிடும்வகைக்கும் ஒரு பயிரிடுவகைப்பெயர் வழங்கப்படுகிறது இதில் இலத்தினில் இருபெயரீட்டுத் தாவரப் பெயரும் அதன் பின்னால் பயிரிடும்வகையின் அடைமொழியும் அடங்கும். பின்னது வழக்கமாக ஒற்றை மேற்கோள் கோட்டுக்குள் கள மொழியில் குறிக்கப்படும். காட்டாக, எட்வார்டு அரச்ர் உருளைக்கிழங்கு சொலனம் டியூபரோசம் 'எட்வார்டு அரசர்' என அமையும். 'எட்வார்டு அரசர்' பயிரிடும்வகையின் அடைமொழியாகும். இது பயிரிடப்படும் தாவர விதிமுறைத் தொகுப்பு அமைவின் விதிகளின்படி ஒற்றை மேற்கோள் குயால் அடைக்கப்படுகிறது.[6]

Remove ads

படத்தொகுப்பு

குறிப்புகள்

  1. அதன் அடிப்படை பொருள் வரையறையின்படி, இருவகை கூறுகளைக் கொண்டதாகும். இது ஒரு வகையனாக, அல்லது வகைபாட்டு அலகாக, தனித் தாவரத்தைக் குறிக்காமல் பயிரிடும்வகையைச் சுட்டும் தனித்த பான்மைகளைப் பகிரும் அனைத்துத் தாவரங்களையும் உள்ளடக்கும்.

மேற்கோள்கள்

நூல்தொகை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads