பரணர், சங்ககாலம்
சங்ககாலப் புலவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரணர் என்னும் பெயர் கொண்ட பல புலவர்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்து வெவ்வேறு வகையான பாடல்களைப் பாடியுள்ளனர். அவர்களில் சங்ககாலப் பரணர் பாடிய 85 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவர் தாம் பாடிய அகப்பொருள் பாடல்களிலும் அவர் காலத்தனவும், அவரது காலத்துக்கு முன்னர் நிகழ்ந்து தாம் அறிந்தனவுமாகிய பல வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளார். எனவே இவர் வரலாற்றுப் புலவர் எனப் போற்றப்படுகிறார்.
இவர் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ள வரலாற்றுப் பதிவுகளைப் புலவர் கால மன்னர் என்னும் தொகுப்பில் மேற்கோள் குறிப்புகளுடன் அறியலாம்.
Remove ads
பரணர் பாடல்கள்
மொத்தம் 85. அவை:
- அகநானூறு 6, 62, 76, 116, 122, 125, 135, 142, 148, 152, 162, 178, 181, 186, 196, 198, 208, 212, 222, 226, 236, 246, 258, 262, 266, 276, 322, 326, 356, 367, 372, 376, 386, 396
- குறுந்தொகை 19, 24, 36, 60, 73, 89, 120, 128, 165, 199, 258, 292, 298, 328, 393, 399,
- நற்றிணை 6, 100, 201, 247, 260, 265, 270, 280, 300, 3`10, 350, 356
- பதிற்றுப்பத்து - ஐந்தாம்பத்து 10 பாடல்கள்,
- புறநானூறு 4[1], 63[2], 141[3], 142[4], 144[5], 145[6], 336, 341, 343, 348, 352, 354, 369,
Remove ads
பரணர் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள்
சேரர்
எழுமுடி மார்பின் எய்திய சேரல், கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன், குடவர் கோமான் பெருஞ்சேரலாதன், குட்டுவன், குட்டுவன் சேரல், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன், சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், பெரும்பூண் பொறையன், பொறையன், மாந்தரன் பொறையன் கடுங்கோ,
சோழர்
கரிகாலன், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, (சோழன் மணக்கிள்ளி), சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி, தித்தன்,
பாண்டியர்
செழியன், பசும்பூட் பாண்டியன்,
மன்னர் முதலானோர்
அழிசி, சேந்தன், அகுதை, அஞ்சி, அதிகன், அறுகை, அதியமான் நெடுமானஞ்சி, ஆட்டனத்தி, ஆய், ஆய் எயினன், ஆரியப் பொருநன், (ஆரிய அண்ணல்), எயினன், எவ்வி, ஐயை, ஓரி, கட்டி, கணையன், கழுவுள், குறும்பியன், ஞிமிலி, தழும்பன், திதியன், தித்தன் வெளியன், நள்ளி, நல்லடி, நன்னன், நன்னன் ஆய், நன்னன் உதியன், நெடுமிடல், பழையன், பாணன், பிண்டன், பேகன், மத்தி, மருதி, மலையன், மிஞிலி, மோகூர்(மன்னன்), வல்லங்கிழான் நல்லடி, விச்சியர் பெருமகன்,விரான், வெளியன் வேண்மான், (கண்ணகி, கடவுள் பத்தினி), கண்ணகி(பேகன் மனைவி), அன்னி மிஞிலி,
மக்கள்
வேண்முது மக்கள், ஆரியர், கொங்கர், கோசர், பூழியர், வேளிர், வேண்மகளிர்,
Remove ads
இதனையும் காண்க
கருவிநூல்
- பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை தலைமையில் அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிய சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) என்னும் நூலில் உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads