பரணி (இலக்கியம்)

பரணி பற்றிய அறிமுகம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்றாகும். போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி இலக்கியம் ஆகும்.

இதை, "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி" எனப் இலக்கண விளக்க பட்டியல் விளக்குகிறது. பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்குவதுண்டு. போரிற் தோற்றவன் நாட்டின் பெயரால் நூலை வழங்குவது மரபு. போர்க்கள வெற்றியே அல்லாமல் அஞ்ஞானம் போன்றவற்றை வென்றதைப் பாடலும் பரணி எனக் கூறப்படுவதையும் பட்டியலில் காணலாம்.

பரணி என்னும் சொல்லானது, காடுகிழவோன், பூதம், அடுப்பு, தாழி, பெருஞ்சோறு, தருமன் நாள், போதம் என்னும் பல பொருள்களைத் தரும். இதனைக்

" காடு கிழவோன் பூதமடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப் பாகு பட்டது பரணி நாட்பெயரே " என்று (திவாகர நிகண்டு) கூறுவதிலிருந்து அறியலாம்.

இது தாழிசை யாப்பால் பாடப்படும். இது ஈரடிப் பாடல். இதனை இக்காலத்தில் கண்ணி என்பர்.

Remove ads

பரணிகள் [1]

மேலதிகத் தகவல்கள் நூல், ஆசிரியர் ...
Remove ads

பகுதிகள்

பொதுவாகப் பரணிகள் பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.

  1. கடவுள் வாழ்த்து
  2. கடை திறப்பு
  3. காடு பாடியது
  4. கோயில் பாடியது
  5. தேவியைப் பாடியது
  6. பேய்ப்பாடியது
  7. இந்திரசாலம்
  8. இராச பாரம்பரியம்
  9. பேய் முறைப்பாடு
  10. அவதாரம்
  11. காளிக்குக் கூளி கூறியது
  12. போர் பாடியது
  13. களம் பாடியது
  14. கூழ் அடுதல்

இவற்றையும் பார்க்கவும்

கருவிநூல்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads