லெட்சுமிபூர் மாவட்டம்

வங்காளதேசத்தின் சிட்டகாங் கோட்டத்திலுள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

லெட்சுமிபூர் மாவட்டம்
Remove ads

லெட்சுமிபூர் மாவட்டம் (Lakshmipur District) (Bengali: লক্ষ্মীপুর জেলা, தெற்காசியாவின் வங்காள தேசத்தின் தென்கிழக்கில் சிட்டகாங் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் லெட்சுமிபூர் நகரம் ஆகும்.

Thumb
வங்கதேசத்தில் லெட்சுமிபூர் மாவட்டத்தின் அமைவிடம்

எல்லைகள்

1440 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் வடக்கில் சந்திரபூர் மாவட்டம், தெற்கில் போலா மாவட்டம் கிழக்கில் நவகாளி மாவட்டம் மற்றும் கொமில்லா மாவட்டம், மேற்கில் பரிசால் மாவட்டம் மற்றும் போலா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

1,440 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட லெட்சுமிபூர் மாவட்டத்தில், 202 சதுர கிலோ மீட்டர் பரப்பு மலை க்காடுகளைக் கொண்டது. இம்மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஐந்து துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:[1] லெட்சுமிபூர் சதர், ராணிபூர், ராம்கஞ்ச், ராம்கதி மற்றும் கமல்நகர் ஆகும்.

உள்ளாட்சி அமைப்புகள்

லெட்சுமிபூர் மாவட்டத்தில் ஐம்பத்தி எட்டு ஊராட்சி ஒன்றியங்களும், 547 ஊராட்சி மன்றங்களும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, லெட்சுமிபூர் மாவட்ட மக்கள் தொகை 17,29,188 ஆகும். அதில் ஆண்கள் 8,27,780 ஆகவும், 9,01,408 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் நூறு பெண்களுக்கு 92 ஆண்கள் வீதம் உள்ளனர். 3,65,339 வீடுகள் உள்ளது. சராசரி எழுத்தறிவு 49.4% ஆகவுள்ளது. [2][3]

பிற தகவல்கள்

இம்மாவட்டத்தின் அதிக பட்சமாக 34. 3°செல்சியஸ் வெப்பமும், குறைந்த பட்சமாக 14.4°C வெப்ப நிலையும் கொண்டது. ஆண்டின் சராசரி மழைப் பொழிவு 3,302 மில்லி மீட்டர் ஆகும். மெக்னா ஆறு, தகாதியா ஆறு, கடாகாளி ஆறு, மற்றும் புலுவா ஆறுகள் இங்கு பாய்கிறது. பிரம்மபுத்திரா போன்ற ஆறுகள் நீர் வழி படகுப் போக்குவரத்திற்கு பயன்படுகிறது.

இம்மாவட்டத்தில் நெல், கோதுமை, ஆமணக்கு, சணல், மிளகாய், உருளைக்கிழங்கு சோளம், சோயாபீன்ஸ், நிலக்கடலை, கரும்பு முக்கிய பயிர்கள் ஆகும். மேலும் மா, பழா, வாழையுடன் பப்பாளி, எலுமிச்சம் பழம், கொய்யாப் பழம் மற்றும் தென்னை பயிரிடப்படுகிறது. படகுகள், மாட்டு வண்டிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads