பள்ளிக் கல்வி அமைச்சகம் (தமிழ்நாடு)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி அமைச்சகம் 13 மே 2006 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இந்த அமைச்சகத்தின் கீழ் 6 துறைகளும் 2 தன்னாட்சி அமைப்புகளும் 3 வாரியங்களும் செயல்படுகின்றன. பள்ளிக் கல்வி அமைச்சர் இவ்வமைச்சகத்தின் கொள்கை முடிவுகளுக்கு பொறுப்பேற்கிறார். அமைச்சரவைக் கூட்டத்திலும் சட்டமன்றத்திலும் அவற்றை எடுத்துரைக்கிறார். இதன் நிர்வாகத் தலைவராக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் பணியாற்றுகிறார். ஒவ்வொரு துறைக்கும் அந்தந்தத் துறை இயக்குநர்களும் தன்னாட்சி பெற்ற அமைப்புகளுக்கு தலைவர் - மேலாண்மை இயக்குர்களும் தலைமையேற்கின்றனர்.

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
Remove ads

தொடக்கம்

இந்திய விடுதலைக்கு முன்னரும் பின்னரும் அமைந்த ஒவ்வொரு அமைச்சரவையிலும் பள்ளிக் கல்வி, உயர்கல்வி ஆகிய அனைத்து நிலைகளும் இணைந்த கல்வி அமைச்சகமே உருவாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்த அமைச்சரவையில் பள்ளிக் கல்விக்கு என தனி அமைச்சரவை உருவாக்கப்பட்டது. தனியாக அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். முதன்மைச் செயலர் (Principal Secretary) தகுதியுடைய ஒருவர் அமைச்சகச் செயலராக நியமிக்கப்பட்டார்.

Remove ads

நோக்கம்

பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் நோக்கமானது சமுதாயத் தேவையின் அடிப்படையில் அவ்வப்பொழுது கொள்கைகள், சட்டங்கள், ஒழுங்காறுகள், பல்வேறு திட்டங்களை பின்வரும் இலக்குகளை அடைவதற்காக வகுப்பதே ஆகும்: [2]

  • பள்ளிகள் இல்லாத சிற்றூர்களுக்கு தொடக்கப்பள்ளிகளை வழங்குதல்.
  • ஆறு முதல் பதினான்கு வயதுவரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாகக் கட்டாயக் கல்வியை வழங்குதல்.
  • பள்ளி இடைவிலகலை ஒழித்தல்
  • பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்
  • பாடத்திட்டத்தை மேம்படுத்துதலும் உயர்த்துதலும்
  • கல்வியின் தரத்தை உயர்த்துதல்
  • படிப்பறிவு இன்மையை ஒழித்தல்
  • தரமான பாடநூல்களை நியாயமான விலையில் உரிய நேரத்தில் வழங்குதல்
  • 5000மும் அதற்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள இடங்களில் கிளை நூலகங்களைத் தொடங்குதல்
  • தொழிற்பயிற்சிப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்
  • பள்ளிகளில் நலவாழ்வுக் கல்வியை ஊக்குவித்தல்
  • பெருமளவில் பெற்றோர்களை பள்ளி மேலாண்மையில் ஈடுபடுத்தல்.
Remove ads

பணிகள்

பள்ளிக் கல்வி அமைச்சகம் பின்வரும் பணிகளை ஆற்றுகிறது: [3]

  • பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகளை நிர்வகித்தல்
  • கொள்கைகளை வகுத்தல்
  • துறைகளில் அமுல்படுத்தப்படும் திட்டங்களுக்கான ஆண்டு வரவு செலவுத் திட்டங்களை முடிவுசெய்தல்
  • பல்வேறு திட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் நல்கைகளை வழங்குதல்
  • கல்வி, பயிற்சி தொடர்பாக பிற அமைச்சகங்களுக்கு / துறைகளுக்கு ஆலோசனை வழங்குதல்

அமைச்சர்கள்

பள்ளிக் கல்வி அமைச்சகத்தில் இதுவரை பின்வருவோர் அமைச்சர்களாகப் பணியாற்றி இருக்கிறார்கள்:

  1. தங்கம் தென்னரசு (13.5.2006 – 15.5.2011)
  2. சி. வே. சண்முகம் (16.5.2011 – 18.1.2012)
  3. அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி (19.1. 2012 – 26.1.2012)
  4. ந. ர. சிவபதி (27.2.2012 – 27.2.2013)
  5. வைகைச் செல்வன் (28.2.2013 - 5.9.2013)
  6. பி. பழனியப்பன் (5.9.2013 - ) (உயர்கல்வி அமைச்சகப் பொறுப்போடு கூடுதல் பொறுப்பு)

செயலாளர்கள்

பள்ளிக் கல்வி அமைச்சகத்தில் இதுவரை பின்வருவோர் செயலளார்களாகப் பணியாற்றி இருக்கிறார்கள்:

  1. குற்றாலிங்கம் (2006 – 2010)
  2. சவிதா (2010 - )

துறைகள்

பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் கீழ் பின்வரும் துறைகள் இயங்குகின்றன:

  1. பள்ளிக் கல்வித் துறை (Department of School Education)
  2. பதின்ம பள்ளிக் கல்வித் துறை (Department of Matriculation Schools)
  3. தொடக்கக் கல்வித் துறை (Department of Elementary Education)
  4. ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சித் துறை – மாநில கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி அவை (Department of Teacher Education, Research and Training – State Council of Education Research and Training)
  5. முறைசாரா – முதியோர் கல்வித் துறை (Department of Non-formal and Adult Education)
  6. பொது நூலகத் துறை (Department of Public Libraries)
Remove ads

தன்னாட்சி அமைப்புகள்

பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் கீழ் பின்வரும் தன்னாட்சி அமைப்புகள் இயங்குகின்றன:

  1. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் (Tamilnadu Text Book Society)
  2. தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் (Tamilnadu Parent Teachers Association)

வாரியங்கள்

பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் கீழ் பின்வரும் வாரியங்கள் இயங்குகின்றன:

  1. அரசுத் தேர்வு வாரியம் (Board of Government Examination)
  2. ஆசிரியர் பணியமர்த்தல் வாரியம் (Teacher Recruitment Board)
  3. இடைநிலைக் கல்வி வாரியம் (Board of Secondary Education)

திட்டங்கள்

பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் கீழ் பின்வரும் வாரியங்கள் செயல்படுத்தப்படுகின்றன:

  1. அனைவருக்கும் கல்வி இயக்கம் (The Educationa for All Movement)
  2. மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம் ( District Primary Education Programme)
  3. இடைநிலைக் கல்வித் திட்டம் (Universalisation of Secondary Education Project)
  4. தளிர்த் திறன் திட்டம் (Thalir Thiran Thittam)

சான்றடைவு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads