அனைவருக்கும் கல்வி இயக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனைவருக்கும் கல்வி இயக்கம் (Sarva Shiksha Abhiyan) இந்திய அரசால் 2000-ம் ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்தியா முழுவதுமாக எல்லா மாநிலங்களிலும் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பின் 86 ஆவது பிரிவின் படி 6 முதல் 14 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் (தோராயமாக 205 மில்லியன் குழந்தைகளுக்கு) கட்டாயக் கல்வி வழங்குவதை உறுதிசெய்யவும், ஆண் , பெண் என பாகுபாடின்றி கல்வி வழங்குவதை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பே அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகும். இதனை அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் அவர்கள் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தார்.
Remove ads
வரலாறு
அனைவருக்கும் கல்வி இயக்கமானது 2000-2001 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது.[1] இருந்தபோதிலும் இதற்கான அடித்தளமிட்டது டி பி எ பி எனப்படும் மாவட்டத் தொடக்கக் கல்வி இயக்கம் ஆகும். இதன் நோக்கம் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதாகும்.[2] மாவட்டத் தொடக்கக் கல்வி இயக்கமானது நாடு முழுவதும் 272 மாவட்டங்கள், 18 மாநிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.[3] இந்தத் திட்டத்திற்கான செலவை நடுவன் அரசு 85 விழுக்காடும் மீதி மாநில அரசும் கொடுக்கின்றன. 2001 ஆம் ஆண்டில் 1500 மில்லியன் டாலர்களுக்கும் மேலான தொகை இதில் பயன்படுத்தப்பட்டது. சுமார் 50 மில்லியன் குழந்தைகள் இதனால் பயனடைந்தனர்.
ஏப்ரல் 1, 2010 அன்று இந்திய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கனவு நிறைவேற வாய்ப்புள்ளதாகக் கல்வியலாளர்கள் கருத்து தெரிவித்தனர்.[4]
Remove ads
நிதி ஒதுக்கீடு
2010-2011 ஆம் ஆண்டில் இந்திய அரசு 21,000 கோடிரூபாயை இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்தது.[5]
குறிக்கோள்
- பள்ளிவயதுள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிக்கூடங்களில் சேர்த்தல்.[6]
- பள்ளியில் சேர்க்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளும் 2007 ஆம் ஆண்டிற்குள் இடைநிற்றலின்றி தொடக்கக் கல்வியை நிறைவு செய்தல்.
- 2010 ஆம் ஆண்டிற்குள் இடைநிலைக்கல்வியை நிறைவு செய்தல்
- அனைவரின் வாழ்க்கைக்குத் தேவையான வகையில் கற்றல் வழிமுறைகளில் ஈடுபடச் செய்தல்.
- ஆண், பெண் மற்றும் சமூக வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் சமமான தரமான கல்வியை வழங்குதல்.
- பள்ளியில் சேர்ந்த அனைவரும் இடைநிற்றலின்றி 2010 அம் ஆண்டை நிறைவு செய்தல்.
கூறுகள்
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்டத்தின் கூறுகளாவன: தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்தல், அவர்களுக்குப் போதுமான பயிற்சிகளை வழங்குதல், தொடக்கக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், கற்றல், கற்பித்தலுக்கான கருவிகளை உருவாக்குதல், வட்டார வள மையம் மற்றும் தொகுதி வள மையங்களின் மூலம் கல்விச் செயல்களில் முன்னேற்றம் அடையச் செய்தல், தேவையான அளவு பள்ளிக்கூடம் மற்றும் வகுப்பறைகளை ஏற்படுத்துதல் போன்றவை ஆகும்.[7]
Remove ads
விதிமுறைகள் [8]
ஆசிரியர்கள்
தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்கச் செய்தல்.
தொடக்கப்பள்ளிகளில் குறைந்தபட்சம் இரு ஆசிரியர்களாவது இருத்தல் வேண்டும்.
பள்ளி அமைவிடம்
ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் (மக்கள் வசிப்பிடமாக ) ஒரு பள்ளிக்கூடம்எனும் அளவில் அமைதல் வேண்டும்.
நடுநிலைப் பள்ளி (upper primary)
தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒரு ஆசிரியருக்கு ஒரு வகுப்பறை இருத்தல் வேண்டும்.
நடுநிலைப்பள்ளி எனில் தலைமை ஆசிரியருக்கு என ஒரு அறை இருத்தல் வேண்டும்.
இலவச பாட நூல்கள்
அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாட நூல்கள்
பள்ளிக் கட்டிடங்களை பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல்
பள்ளிக் கல்வி மேலாண்மைக்குழுவின் மூலமாக மட்டுமே இதனை மேற்கொள்ளல் வேண்டும். ஆண்டிற்கு 5000 ரூபாய் வரை பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் பெறலாம்.
ஆசிரியர் உதவித் தொகை
தொடக்கக்கல்வி மற்றும் நடுநிலைக்கல்வி ஆசிரியர்களுக்கு தலா 500 ரூபாய் வீதம் வழங்கப்படும்.
ஆசிரியர்களுக்கான பயிற்சி
20 நாள் பயிற்சியானது அனைத்து ஆசிரியர்களுக்கும் கொடுக்கப்படும். பயிற்சி பெறாத ஆசிரியர் எனில் 60 நாட்கள் கொடுக்கப்படும்.
வள மையங்கள்
முதன்மை கட்டுரை:வட்டார வள மையம்
வட்டார வள மையம் தேவையான இடங்களுக்கு அதிகபட்சமாக 6 கோடி ரூபாய் வழங்கப்படும்.தொகுதி வள மையங்கள் அமைக்க 2 இலட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. தளபாடம் வாங்குவதற்காக வட்டார வள மையங்களுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாயும், தொகுதி வள மையங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. திடீரென்று ஏற்படும் செலவினங்களுக்காக வட்டார வள மையங்களுக்கு 12,000 ஆயிரம் ரூபாயும், தொகுதி வள மையங்களுக்கு 2,500 ரூபாயும் வழங்கப்படுகிறது.
Remove ads
வெளியிணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2011-10-04 at the வந்தவழி இயந்திரம்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads