பழந்தமிழ்
மொழி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பழந்தமிழ் என்பது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம் தமிழ்மொழைக் குறிப்பது ஆகும்.[5] பழந்தமிழுக்கு முந்திய தமிழ் மொழி வளர்ச்சியின் காலம் முதனிலைத்-தமிழ் எனப்பட்டது. பழந்தமிழ் அதன் காலத்திற்குப் பிறகு இடைக்காலத் தமிழாக மாறுகிறது. பழந்தமிழில் உள்ள ஆரம்பகால பதிவுகள் கிமு மூன்றாம் மற்றும் முதல் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலக் கல்வெட்டுகள் குகைகளிலும் மட்பாண்டங்களிலும் உள்ளன. இந்தக் கல்வெட்டுகள் தமிழ்ப் பிராமி என்று அழைக்கப்படும் பிராமி எழுத்துக்களின் மாறுபட்ட வடிவில் எழுதப்பட்டுள்ளன.[6][7] பழந்தமிழில் துவக்கக் கால பெரிய நூல் தாெல்காப்பியம் ஆகும். இது தமிழ் இலக்கணம் மற்றும் செய்யுள்கள் பற்றிய துவக்ககாலப் படைப்பாகும். இது கிமு இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பழையதாக இருக்கலாம்.[8][9]

பழந்தமிழில் ஏராளமான இலக்கியப் படைப்புகள் தற்போதுவரை கிடைக்கின்றன. சங்க இலக்கியம் என்று அழைக்கப்படும் 2,381 கவிதைத் தொகுப்புகள் இதில் அடங்கும். இந்த கவிதைகள் பொதுவாக கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்படவையாகும்.[8] அக்காலத்தில்தான் சமயச்சார்பற்ற இலக்கியங்கள் அதிகமாக இருந்திருக்கின்றன. இவை இந்தியாவில் உள்ள மிகப் பழமையான இலக்கியங்களாக அமைகின்றன.[10] பழந்தமிழில் உள்ள பிற இலக்கியப் படைப்புகளில் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை அடங்கும், மேலும் 5 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்ட பல நன்நெறி மற்றும் போதனை நூல்களும் உள்ளன.[8][9][nb 1]
பிற்காலத் தமிழிலோ, இக்காலத் தமிழிலோ கையாளப்படுவனவற்றை ஒப்புநோக்கத்துக்காக மட்டுமே பழந்தமிழ்ப் பாங்கினைத் தனியாக எடுத்துக்காட்டிக் குறிப்பிடுகிறோம். சங்கநூல் பாடல்களும், அதற்குப் பெருமக்கள் எழுதியுள்ள உரைகளும் இவற்றிற்குச் சான்று மூலங்கள்.
- இக்கட்டுரை விரியும்.
- சங்கநூல் தரும் செய்திகள் என்னும் கட்டுரையின் பகுப்பு இது.
Remove ads
பாகுபாடு
- சொல்லைப், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்காகப் பாகுபடுத்திக் காண்பது மொழியியல் பாகுபாடு.
- சொல்லை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்காகப் பாகுபடுத்திக் காண்பது வழக்கியல் பாகுபாடு.
செஞ்சொல் [16][17]
செஞ்சொல்லை இலக்கண நூலார் செந்தமிழ் என்று குறிப்பிடுகின்றனர். வட்டார வழக்கில் திரியாத சொல் என்று இதனைக் கூறலாம். தொல்காப்பியம் இதனை இயற்சொல் [18] என்று குறிப்பிடுகிறது. வட்டார மக்கள் வளைத்துக்கொண்ட சொல் கொடுந்தமிழ். கொடுக்கும்போது கை வளைவது போலப் பேசும்போது வளைந்த சொல் கொடுந்தமிழ்.[19] பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பன இதன் பாகுபாடுகள்.
பெயர்ச்சொல்
குழந்தைகளுக்கும், மக்களுக்கும் இடுகுறியால் பெயர் சூட்டி வழங்குவது போல, பொருள்களுக்கு மரபு வழியில் பெயர் சூட்டப்பட்டு வழங்கும் பெயரைப் பெயர்ச்சொல் என்கிறோம். இதனைத் தமிழ்மொழி உயர்திணை, அஃறிணை என இரண்டு திணைகளாகவும், ஆண்பால், பெண்பால், பலர்பால் என உயர்திணைச் சொற்களை மூன்று பால்களாகவும், ஒன்றன்பால், பலவின்பால் என அஃறிணைச் சொற்களை இரண்டு பால்களாகவும் பாகுபடுத்திக்கொண்டுள்ளனர். மோலும் அவற்றைத் தன்மை, முன்னிலை, படர்க்கை என மூன்று இடப்பெயர்களாகவும், ஒருமை. பன்மை என இரண்டு எண்-நிலைகளாகவும் பாகுபடுத்திக்கொண்டு அவற்றிற்கு ஏற்ற வினைச்சொல் முடிபுகளைக் கொண்டுள்ளனர்.
உயர்திணை
- மக்களாக மதிக்கப்படுவோரை 'உயர்திணை' என்றனர். எடுத்துக்காட்டு:
அஃறிணை
- ஐம்பால் = ஐந்து பகுதிகளாக ஒப்பனை செய்யப்பட்ட தலைமுடி ப[22]
- திற்றி = மென்று தின்னும் கறி [23]
- நசை = நச்சும் பொருள், விரும்பும் பொருள் [24]
- புழுக்கு = பொங்கல் சோறு [25]
சொல்
சொல்லை ஒலி நோக்கில் மூன்று வகையாகப் பாகுபடுத்திக்கொண்டனர். அவை ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டு மாத்திரை ஒலியைக் கடந்து ஒலிக்கும் 'பொதுமொழி' என்பன.[26] சொற்கள் புணரும்போது நிகழும் மாற்றங்களிலிருந்து இந்த முந்நிலைப் பாகுபாட்டின் இன்றியமையாமையை உணரமுடிகிறது.
பாகுபாட்டின் பயன்
- 'நா' என்பது நாக்கைக் குறிக்கும் ஒரெழுத்தொருமொழி. "நாச்செற்று விக்குள் மேல் வாராமுன்" என்பது திருக்குறள். இந்தத் தொடரில் நா என்பது எழுவாய். அஃறிணை. செற்று [27] என்பது அதன் வினை. எழுவாய்த் தொடர் ஒற்று மிகாமல் இயல்பாக வருதல் வேண்டும். ஆனால் இங்கு ஒற்று மிக்கு வந்துள்ளதைக் காண்கிறோம். பூ என்பது ஓரெழுத்தொருமொழி. பூ பூத்தது - இங்கு ஒற்று மிகவில்லை. பூப் பூக்கும் காலம் - இங்கு ஒற்று மிக்கது. இவ்வாறு ஓரெழுத்தொருமொழி ஒற்று மிக்கும், மிகாமலும் உறழ்ந்து வரும்.
- 'கடு' [28] என்பது ஈரெழுத்தொருமொழி. 'புளி' என்பது மற்றொரு ஈரெழுத்தொருமொழி. இவை 'கடு தின்றான்', 'கடுத் தின்றான்' என ஒற்று மிக்கும் மிகாமலும் புணரும். புளி என்பதும் அவ்வாறே 'புளி தின்றான்', 'புளித் தின்றான்' எனப் புணரும். பொருளில் மாறுபாடு இல்லை.
- 'நிலா', 'கனா' என்பன இரண்டு மாத்திரையின் மிக்கு வந்த பொதுமொழி.[29] இது 'நிலா தோன்றிற்று' என எழுவாய்த் தொடரில் இயல்பாக மட்டும் வந்தது. 'கனாக் கண்டான்' என அஃறிணை இரண்டாம் வேற்றுமைத் தொகையில் ஒற்று மிக்கு வந்தது.[30]
பொதுமொழி - காண்க சொல், பகாப்பதம், பகுபதம் (இலக்கணம்), பகுபத உறுப்புக்கள்
வினைச்சொல்
- கொட்கும் - கால் கொட்கும் - (கடல் நீரைக்) காற்று முகந்துகொண்டு செல்லும் [31]
- வணர் - வணங்கித் தொங்குதல் - (இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால்) [32]
துணை வினை
இடைச்சொல்
பின்னொட்டு (வினை)
- மார் - அனையை ஆகன்மாரே - ஆகல் + மார் [35]
பின்னொட்டு (விகுதி)
உரிச்சொல்
Remove ads
சேர்சொல்
செஞ்சொல் என்னும் செந்தமிழ்ச் சொல்லோடு சேரும் சொற்களைச் சேர்சொல் என்கிறோம். இது செந்தமிழ்
திரிசொல்
திசைச்சொல்
வடசொல்
சொற்றொடர்
அவ்வினை = அவ்வும் வினை - வினைத்தொகை, அவ்வுதல் = மண்ணாசை, பொன்னாசை (19)
பொன்மொழித் தொடர் [39]
பொருள் விளக்கத் தொடர்
பூணா ஐயவி (புனிற்றுமகள் பூணா ஐயவி) = கோட்டைக் கதவுக்குப் போடும் குறுக்குமரத் தாள்பாள் - பூணும் ஐயவி = வெண்சிறு கடுகு எண்ணெய்.[43]
அரிய சொல்லாட்சிகள்
சுரிநம் = ஆமை ஓடு [44]
அரிய பெயர்ச்சொல் விளக்கம்
அரிய வினையாக்க விளக்கம்
அல் - இடைச்சொல்
- படிமுறை வளர்ச்சி 1 - உடன்பாட்டுப் பொருளில் மட்டும் வருதல்
- ஈ என இரத்தல் இழிந்தன்னறு, அதன் எதிர்
- ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
- கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன் எதிர்
- கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.[45]
- படிமுறை வளர்ச்சி 2 - உடன்பாடும் எதிர்மறையுமாகத் தனித்தனியே வருதல்
- பயனில்சொல் பாராட்டுவானை மகன் எனல், மக்கட் பதடி எனல் [46]
- படிமுறை வளர்ச்சி 3 - உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் சிலேடையாக வருதல்
- ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம், ஓதல் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை (= சிறந்தது) [47]
அரிய தொடர் விளக்கம்
தொலையாக் கற்ப - கற்பு = கற்றல் [48]
Remove ads
குறிப்புகள்
- The dating of Sangam literature and the identification of its language with Old Tamil was questioned by Herman Tieken who argued that the works are better understood as 9th century Pāṇṭiyan dynasty compositions, written in an archaising style to make them seem older than they were. Tieken's dating has, however, been criticised by multiple reviewers of his work.[11][12] [13][14][15]
மேற்காேள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads